நாகூரில் தீக்குளித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை போலீசார் விசாரணை
நாகூரில் தீக்குளித்து ஆட்டோ டிரைவர் தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகூர்,
நாகையை அடுத்த நாகூர் புது சாலை தெருவை சேர்ந்தவர் முகமது ஹனிபா. இவருடைய மகன் ஹாஜி முகமது (வயது 32). ஆட்டோ டிரைவர். இவருக்கு மஜ்ரின் (25) என்ற மனைவியும், முகம்மது அப்னா (6), முகம்மது அதுனான் (5) ஆகிய 2 மகன்களும், தஸ்பியா (2) என்ற பெண் குழந்தையும் உள்ளனர்.
இந்த நிலையில் சில நாட்களாக ஹாஜி முகமது ஹனிபாவுக்கும், மனைவி மஜ்ரினுக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. நேற்று முன்தினம் இரவு கணவன், மனைவி இடையே மீண்டும் குடும்ப தகராறு ஏற்பட்டது.
தீக்குளித்து தற்கொலை
இதில் மனவேதனை அடைந்த ஹாஜி முகமது வீட்டில் இருந்து மண்எண்ணெய்யை எடுத்து தனது உடலை ஊற்றி தீவைத்து கொண்டார்.
இதில் அலரல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து அவரை மீட்டு நாகை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி ஹாஜி முகமது பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து நாகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு விசாரணை நடத்தி வருகின்றனர்.