சட்டநாதபுரம் ஊராட்சியில் குடிநீர் வழங்கவில்லையென்றால் சாலை மறியல் கிராமசபை கூட்டத்தில் தீர்மானம்
சட்டநாதபுரம் ஊராட்சியில் குடிநீர் வழங்கவில்லையென்றால் சாலை மறியல் நடத்தப்படும் என்று கிராமசபை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சீர்காழி,
சீர்காழி அருகே சட்டநாதபுரம் ஊராட்சியில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய உதவியாளர் சாகினா பாத்திமா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் அந்தோணி ஆசிர்வாதம் வரவேற்றார். கூட்டத்தில் ஊராட்சியின் வரவு-செலவு கணக்குகள் சரிபார்க்கப்பட்டன.
கூட்டத்தில், ஹைட்ரோ கார்பன் திட்டத்தை மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும். சட்டநாதபுரம் ஊராட்சியில் கொள்ளிடம் கூட்டு குடிநீர் திட்டத்தின்கீழ் குடிநீர் வினியோகிக்க வேண்டும். இல்லையென்றால் நாளை (திங்கட்கிழமை) சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது. சட்டநாதபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட கே.வி.எஸ். நகரில் உள்ள சிறுவர் பூங்காவை சீரமைக்க கேட்டு கொள்வது. உப்பனாற்றில் சூரக்காடு என்ற இடத்தில் தடுப்பணை கட்ட வேண்டும். ஊராட்சியில் உள்ள சீமை கருவேல மரங்களை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் மக்கள் நீதி மைய பொறுப்பாளர்கள், மகளிர் சுயஉதவிக்குழுவினர் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
விளந்திடசமுத்திரம்
இதேபோல் விளந்திடசமுத்திரம் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபை கூட்டத்தில் உதவியாளர் கவிதா முன்னிலை வகித்தார். ஊராட்சி செயலாளர் தியாகராஜன் வரவேற்றார். கூட்டத்தில் சேதமடைந்த சாலைகள், குளத்தின் படித்துறைகள், கல்வெட்டுகள் உள்ளிட்டவைகளை சீரமைப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
திருக்கடையூர்
திருக்கடையூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் நடந்த கிராமசபை கூட்டத்திற்கு ஊராட்சி செயலாளர் வெங்கடேஷ் தலைமை தாங்கினார். கூட்டத்தில், திருக்கடையூர் ஊராட்சியில் தனிநபர் கழிவறை, தெருவிளக்கு, குடிநீர் வசதி உள்ளிட்ட வசதிகள் செய்து கொடுக்க வேண்டும். திருக்கடையூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தேங்கும் குப்பைகளை கொட்டுவதற்கு விவசாய பண்ணைக்கு சொந்தமான இடத்தில் இடம் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதேபோல் பிள்ளைபெருமாள்நல்லூர் ஊராட்சி செயலாளர் மதியழகன் தலைமையிலும், டி.மணல்மேடு ஊராட்சி செயலாளர் சந்திரசேகர் தலைமையிலும் கிராமசபை கூட்டங்கள் நடைபெற்றன.
ஆக்கூர்
செம்பனார்கோவில் அருகே ஆக்கூர் ஊராட்சியின் கிராமசபை கூட்டம் பஞ்சாக்கை கிராமத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஊர்நல அலுவலர் நடராஜன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், ஊராட்சிக்கு உட்பட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
தொடர்ந்து ஊர்நல அலுவலரிடம், பொதுமக்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக மனு கொடுத்தனர். முடிவில் ஊராட்சி செயலாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.