தாமதமாக வந்த பருவமழை கொட்டி தீர்த்தது வெள்ளக்காடாக மாறிய மும்பை மாநிலம் முழுவதும் கனமழைக்கு 9 பேர் பலி
மராட்டியத்தில் ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான 4 மாதம் பருவமழை காலம் ஆகும்.
மும்பை,
இந்த ஆண்டு பருவமழை தாமதமாகவே தொடங்கும் என ஸ்கைமெட் என்ற தனியார் வானிலை ஆய்வு நிறுவனம் தெரிவித்து இருந்தது. அதன்படி பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
மாநிலத்தின் பல மாவட்டங்கள் வறட்சியின் கோர பிடியில் சிக்கி தவித்து வந்த நிலையில், பருவமழை தாமதம் மாநில மக்களை கலக்கமடைய செய்தது.
குறிப்பாக மாநில தலைநகர் மும்பைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் தண்ணீர் இருப்பு அதிரடியாக குறைந்தது. ஏரிகளில் இன்னும் ஒரு மாதத்துக்கு வினியோகிப்பதற்கு தேவையான தண்ணீர் மட்டுமே இருப்பு உள்ளது. எனவே மும்பையில் குடிநீர் தட்டுப்பாடு அபாயம் ஏற்படாமல் இருக்க மும்பைவாசிகள் பருவமழையை பெரிதும் எதிர்பார்த்து இருந்தனர்.
மும்பையில் வழக்கமாக மழை ஜூன் 10-ந் தேதி தொடங்கி விடும். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பருவமழை இந்த ஆண்டு 15 நாட்கள் தாமதத்திற்கு பிறகு தொடங்கியது. இருந்தாலும் பெரியளவில் மழை பெய்யவில்லை. இந்தநிலையில், மும்பை உள்பட மாநிலம் முழுவதும் மூன்று நாட்கள் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
இதன்படி நேற்று முன்தினம் இரவு முதலே பரவலாக மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை நேற்று காலை தீவிரமடைந்தது. மும்பையில் நகரம் முழுவதும் விடாமல் கனமழை வெளுத்து வாங்கியது. தானே, பால்கர் மாவட்டங்களிலும் பலத்த மழை கொட்டியது.
இந்த மழை மாலை வரையிலும் நீடித்தது. கொட்டி தீர்த்த முதல் கனமழையால் பல இடங்கள் வெள்ளக்காடாகின. பிரதான சாலைகளை வெள்ளம் சூழ்ந்தது.
மும்பையில் மாட்டுங்கா, பரேல் இந்துமாதா, கிங்சர்க்கிள், மலாடு, தாதர், போரிவிலி, சயான், பாந்திரா, அந்தேரி மற்றும் பால்கரில் நாலச்சோப்ரா, வசாய் உள்ளிட்ட இடங்களில் உள்ள சாலைகளில் வெள்ளம் தேங்கியது. அந்தேரியில் மிலன்சப்வே பகுதியில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதில் வாகனங்கள் வெள்ளநீரில் தத்தளித்தபடி சென்றன.
இதன் காரணமாக சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. கிழக்கு விரைவு சாலை, மேற்கு விரைவு சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வாகன ஓட்டிகள் கடும் சிரமத்துக்குள்ளானார்கள். பெஸ்ட் பஸ்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
மழையின் காரணமாக ஆங்காங்கே சாலைகளில் வாகனங்கள் பழுதாகி நின்று, போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தின.
வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் பாதசாரிகள் அவதி அடைந்தனர். பள்ளி, கல்லூரி மாணவர்கள், அலுவலகங்களுக்கு செல்வோர் என அனைவரும் பாதிக்கப்பட்டனர்.
கொட்டி தீர்த்த கனமழையால் மும்பையின் போக்குவரத்து உயிர்நாடியான மின்சார ரெயில் சேவையும் பாதிக்கப்பட்டது. மத்திய ரெயில்வேயின் மெயின், துறைமுகம், டிரான்ஸ்ஹார்பர் மற்றும் மேற்கு ரெயில்வே வழித்தடத்திலும் ரெயில்கள் தாமதமாக இயங்கின.
காஞ்சூர்மார்க் - விக்ரோலி ஆகிய ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளங்களை வெள்ளநீர் மூழ்கடித்தது. இதனால் விரைவு மற்றும் ஸ்லோ வழித்தடங்களில் ரெயில்கள் ஆமை வேகத்தில் இயக்கப்பட்டன. கனமழையால் மும்பையில் விமான சேவையிலும் பாதிப்பு உணரப்பட்டது.
மழையின் போது, அந்தேரி கிழக்கு பகுதியை சேர்ந்த காசி அம்மாள் (வயது60) என்ற மூதாட்டி மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இவரது சொந்த ஊர் திருவண்ணாமலை மாவட்டம் ஆகும். இதேபோல கோரேகாவ் கிழக்கு பகுதியை சேர்ந்த ராஜேந்திர யாதவ், அவரது மகன் சஞ்சய் யாதவ் (24) ஆகிய 2 பேர் மின்சாரம் தாக்கி பலியானார்கள். இதில் மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
தாதர் கிழக்கில் பிற்பகல் 3 மணியளவில் சுவர் ஒன்று இடிந்து விழுந்தில் சந்திரகாந்த் தின்கர், சேத்தன் திலிப், விஜய் ஆகிய 3 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் சிகிச்சைக்காக கே.இ.எம். மாநகராட்சி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
கனமழை காரணமாக தானே மும்ராவில் உள்ள பழுதடைந்த 4 மாடி கட்டிடத்தின் மேற்பூச்சுகள் பெயர்ந்து விழுந்தன. இதையடுத்து அந்த கட்டிடத்தில் வசித்து வந்த 16 குடும்பத்தினர் மற்றும் தரை தளத்தில் செயல்பட்டு வந்த பள்ளியில் படித்து வரும் 2 ஆயிரம் மாணவர்கள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர்.
நேற்று இரவு 7 மணி வரை நிலவரப்படி மும்பையில் சராசரியாக 85.86 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. இதில் நகர்புறத்தில் 64.52 மில்லி மீட்டரும், கிழக்கு புறநகரில் 116.27 மில்லி மீட்டரும், மேற்கு புறநகரில் 89.10 மில்லி மீட்டரும் பதிவாகி உள்ளது.
இன்றும் (சனிக்கிழமை) கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
பருவமழை தீவிரமடைந்து பெய்ய தொடங்கி உள்ளது மும்பைவாசிகளை மகிழ்ச்சியடைய செய்து உள்ளது.
இதேபோல மராட்டியம் முழுவதும் பருவமழை தீவிரம் அடைந்து உள்ளது.குறிப்பாக நாசிக்கில் நேற்று 4-வது நாளாக மழை வெளுத்து வாங்கியது. இங்கு மிம்பாலாஸ் கிராமத்தை சேர்ந்த 18 வயது இளம்பெண் ரூபாலிஎன்பவர் மின்னல் தாக்கியும்,மும்பை நாக்கா பகுதியில் புவப்பா காலால் (52) என்பவர் மின்சாரம் தாக்கியும் இறந்தனர்.
வாசிம் மாவட்டத்தில் பிண்டு ஷிண்டே என்ற 28 வயது வாலிபர் ஆடுமேய்க்க சென்றபோது மின்னல் தாக்கி உயிரிழந்தார். அகோலாவில் 2 விவசாயிகள் மின்னல் தாக்கி பலியானார்கள்.
பால்கர் மாவட்டத்தில் 8 வயது சிறுவன் மின்னல் தாக்கியதில் உடல் கருகி பலியானான். மும்பை உள்பட மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் கனமழைக்கு 9 பேர் பலியானார்கள்.