எழும்பூர் ரெயில் நிலையத்தில் மழையால் சேதம் அடைந்த தேசிய கொடி 100 அடி உயர கம்பத்தில் இருந்து இறக்கப்பட்டது

கன மழையால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள 100 அடி உயர கம்பத்தில் பறந்த தேசிய கொடி சேதம் அடைந்தது.

Update: 2019-06-28 22:30 GMT
சென்னை,

மத்திய அரசின் 100 ரெயில் நிலையங்களில் தேசிய கொடிகள் ஏற்றும் திட்டத்தின் கீழ், சென்னை ஐ.சி.எப்., எம்.ஜி.ஆர். சென்டிரல், எழும்பூர் ரெயில் நிலையங்களில் 100 அடி உயரம் கொண்ட கம்பத்தில், 24 மணி நேரமும் பறக்க கூடிய தேசியகொடி ஏற்றப்பட்டது.

இதில் கடந்த 10-ந் தேதி எழும்பூர் ரெயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் 30 அடி நீளமும், 20 அடி அகலமும் உள்ள தேசிய கொடி ஏற்றப்பட்டது. சென்னையில் கடந்த 26-ந் தேதி பலத்த காற்றுடன் கூடிய கன மழை பெய்தது. இதனால் பல இடங்களில் மரங்களும் வேரோடு சாய்ந்து பாதிப்பை ஏற்படுத்தியது.

இந்த கன மழையால் எழும்பூர் ரெயில் நிலையத்தில் உள்ள 100 அடி உயர கம்பத்தில் பறந்த தேசிய கொடி சேதம் அடைந்துள்ளது. இதனை அறிந்த எழும்பூர் ரெயில்வே நிர்வாகம் உடனடியாக தேசிய கொடியை கீழே இறக்கினர். மாற்று தேசிய கொடி தயாரிக்கப்பட்ட பின் விரைவில் எழும்பூர் ரெயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் ஏற்றப்படும் என எழும்பூர் ரெயில் நிலைய அதிகாரி தெரிவித்தார்.

மேலும் செய்திகள்