மின் கட்டண பாக்கிகளுக்கு அதிகாரிகளே பொறுப்பு அமைச்சர் கமலக்கண்ணன் எச்சரிக்கை
மின் கட்டண பாக்கிகளுக்கு அதிகாரிகளே பொறுப்பு என்று அமைச்சர் கமலக்கண்ணன் எச்சரிக்கை விடுத்தார்.
புதுச்சேரி,
புதுவை அரசின் மின்துறையில் நுகர்வோர் மின்கட்டணத்தை அந்த பகுதியில் உள்ள மின் கட்டண மையங்களில்தான் செலுத்த முடியும். இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர். எனவே மின் கட்டணம் செலுத்தும் முறையை எளிமையாக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து தகவலியல் மையத்தின் புதிய தொழில்நுட்ப வசதியை கொண்டு பொதுமக்கள், அரசுத்துறைகள் எளிமையான முறையில் மின்கட்டணம் செலுத்த புதிய மென்பொருள் ரூ.94 லட்சம் செலவில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன்படி ஆன்லைன் மூலமாக மின் கட்டணத்தை செலுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து மின் கட்டண மையங்களிலும் புதுவை மாநிலத்தில் எந்த பகுதியின் மின் கட்டணத்தையும் செலுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இந்த மையங்களில் டெபிட், கிரெடிட் கார்டு மூலமாகவும் கட்டணத்தை செலுத்தலாம். ஏற்கனவே பாரத ஸ்டேட் வங்கியின் மூலமாக மட்டுமே ஆன்லைன் மூலம் மின் கட்டணம் செலுத்தும் வசதி இருந்தது.
தற்போது புதியதாக மேம்படுத்தப்பட்டுள்ள மென்பொருள் மூலம் 55 வங்கிகள் மூலமாக நுகர்வோர் மின் கட்டணம் செலுத்தலாம். இந்த புதிய சேவையை மின்துறை அமைச்சர் கமலக்கண்ணன் தனது அலுவலகத்தில் தொடங்கிவைத்தார்.
தொடர்ந்து அமைச்சர் கமலக்கண்ணன் நிருபர்களிடம் கூறியதாவது:-
கடந்த ஆண்டு நுகர்வோரிடமிருந்து மின் கட்டணமாக ரூ.1,353 கோடி வசூல் செய்தோம். மின் கட்டண நிலுவைத்தொகையை வசூலிக்க துரித நடவடிக்கை மேற்கொண்டோம். வீடு, வணிக நிறுவனங்கள் ரூ.150 கோடி மின்கட்டண பாக்கி வைத்திருந்தன.
அவர்களிடம் இருந்து ரூ.60 கோடி நிலுவைத்தொகையை வசூலித்துள்ளோம். இன்னும் 89 கோடி பாக்கி உள்ளது. அரசு சார்பு நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள் மின் கட்டணம் ரூ.388 கோடியை பாக்கியாக வைத்துள்ளனர். இவற்றையும் வசூலிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பாக்கிகளை வசூலிக்கும்போது எந்தவித பாரபட்சமும் பார்ப்பதில்லை.
தனியார் நிறுவனங்களுக்கு ஆதரவாக அதிகாரிகள் செயல்பட்டால் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். தனி நபர்கள் மின்கட்டண பாக்கி வைத்திருந்தால் அதற்கு அதிகாரிகள் பொறுப்பு ஏற்கவேண்டியதிருக்கும். மின் கட்டணத்தை அரசு முடிவு செய்து உயர்த்துவது கிடையாது. யூனியன் பிரதேசங்களுக்கான மின் கட்டணத்தை இணை ஒழுங்குமுறை மின்சார ஆணையம்தான் கட்டணத்தை நிர்ணயிக்கிறது. ஆணையமானது மின் இழப்பு, பராமரிப்பு செலவு உள்ளிட்டவற்றை கவனத்தில் கொண்டு கட்டணத்தை நிர்ணயிக்கிறது.
மின் கட்டணத்தை குறைப்போம் என்று முதல்-அமைச்சர் கூறியுள்ளார். இதுதொடர்பாக நாங்கள் ஆணையத்திடம் கோரிக்கை வைக்க முடியும். புதுவைக்கு ஒட்டுமொத்தமாக 470 மெகாவாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால் காரைக்காலில் உள்ள மின்திறல் குழுமம் மூலம் 31 மெகாவாட் மின்சாரம் மட்டுமே நாம் உற்பத்தி செய்கிறோம்.
புதுப்பிக்கவல்ல எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்ய முன்வருபவர்களுக்கு மத்திய அரசின் 40 சதவீத மானியத்துடன், புதுச்சேரி அரசும் 10 சதவீத மானியம் தருகிறது. புதுவை மின்துறையில் 70 இளநிலை பொறியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளது. அந்த இடங்களை நிரப்புவதற்கான கோப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. அந்த பணியிடங்களில் 40 பேர் நேரடியாகவும், 30 பேர் பதவி உயர்வு மூலமாகவும் நியமிக்கப்பட உள்ளனர். இவ்வாறு அமைச்சர் கமலக்கண்ணன் கூறினார்.
இந்த நிலையில் அமைச்சர் கமலக்கண்ணன் நேற்று மதியம் சாரத்தில் உள்ள எஸ்.ஆர். சுப்ரமணிய அரசு உயர் நிலைப்பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கு மாணவர்களுடன் அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டார் பள்ளி வளாகம் முழுவதும் ஆய்வு செய்தார்.
அப்போது கழிவறை சுத்தமாக உள்ளதா? என்று பார்வையிட்டார். பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார்.