குமாரபாளையம் பகுதியில் ஒரே நாளில் 46 சாயப்பட்டறைகள் இடிப்பு
குமாரபாளையம் பகுதியில் ஒரே நாளில் 46 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டன.
குமாரபாளையம்,
சேலம் மாவட்டம் கத்தேரி பகுதி முதல் நாமக்கல் மாவட்டம் குமாரபாளையம் காவிரி ஆறு வரையில் உள்ள பெரும்பள்ளத்தை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில் புற்றீசல் போல் நூற்றுக்கணக்கான கீற்றுக்கொட்டகை மற்றும் தகரக்கொட்டகை கொண்டு சாயப்பட்டறைகள் அமைத்து இயங்கி வந்தது. இந்த சாயப்பட்டறைகளில் இருந்து சாயக்கழிவு நீரை நேரடியாக வெளியேற்றுவதால் குமாரபாளையம் பகுதிகளில் உள்ள 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கிணறு மற்றும் போர்வெல்கள் மாசுபட்டது.
சாயக்கழிவுகள் சாக்கடை ஓடையில் கலந்து நேரடியாக காவிரி ஆற்றில் கலக்கிறது. இதனால் ஓடை ஓரம் வசிக்கின்ற பொதுமக்களுக்கு உடல் அரிப்பு, தோல் நோய்கள் ஏற்பட்டு வந்தது. சாயப்பட்டறைகளில் இருந்து சுத்திகரிப்பு செய்யாமல் சாயக்கழிவு நீர் வெளியேற்றுவதால் சுற்றுப்புறச்சூழல் பாதிக்கப்படுவதாகவும் அரசு நடவடிக்கை எடுக்ககோரி பொதுமக்கள் சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது.
அதிகாரிகள் நடவடிக்கை
குமாரபாளையம் மற்றும் பள்ளிபாளையம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்து பகுதிகளுக்கு நகராட்சி குடிநீர் திட்டம், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் காவிரியில் குடிநீர் ஏற்றப்பட்டு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. சாயமருந்து கலந்த காவிரி குடிநீரை குடிக்கும் அனைவருக்கும் கேன்சர், தோல்நோய் போன்ற பல்வேறு நோய்கள் ஏற்பட்டு வருவதாக அடிக்கடி புகார் எழுந்தது.
இந்நிலையில் நாமக்கல் மாவட்ட கலெக்்டர் ஆசியா மரியம் உத்தரவின் பேரில், மாவட்ட சுற்றுச்சூழல் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயலட்சுமி தலைமையிலான ஒரு குழுவும், பறக்கும்படை பொறியாளர் சுவாமிநாதன் உதவிப்பொறியாளர் செல்வகுமார் ஆகியோர் தலைமையிலான மற்றொரு குழுவும் குமாரபாளையம் பகுதியில் தனித்தனியாக சாயப்பட்டறை இடிப்பு நடவடிக்கையில் இறங்கியது. குமாரபாளையம் தாசில்தார் தங்கம் மற்றும் கிராம அதிகாரிகள் உதவியுடன் துணை போலீஸ் சூப்பிரண்டு சண்முகம் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்புடன் நூலுக்கு சாயமிடும் சாயப்பட்டறைகளை இடிக்கும் நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டனர்.
46 பட்டறைகள் இடிப்பு
குமாரபாளையத்தில் ஓலப்பாளையம் ரோடு, கோட்டைமேடு, ஆனங்கூர் ரோடு, மேற்கு காலனி, எதிர்மேடு, எருமைக்கட்டுதுறை, அம்மன் நகர், சின்னப்பநாய்க்கன்பாளையம், எடப்பாடி ரோடு காவேரி நகர் பகுதிகளில் சட்டத்துக்குப் புறம்பாக இயங்கிவந்த சாயப்பட்டறைகளை பொக்லைன் எந்திரம் கொண்டு இடிக்கும் பணி தொடங்கியது. 30 சாயப்பட்டறைகளில் கட்டப்பட்டு இருந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட சாயமருந்து கலக்கும் தொட்டிகள், நூல் நனைத்து வைக்கும் தொட்டிகள் இடித்து தகர்க்கப்பட்டது.
இதுகுறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பொறியாளர் ஜெயலட்சுமி கூறுகையில், குமாரபாளையம் பகுதியில் நேற்று காலை தொடங்கிய சாயப்பட்டறை இடிக்கும் பணி மாலை வரை நடைபெற்றது. ஒரே நாளில் 46 சாயப்பட்டறைகள் இடிக்கப்பட்டதாகவும், குமாரபாளையத்தில் சட்டத்திற்கு புறம்பாக இயங்கிவரும் அனைத்து சாயப்பட்டறைகளையும் இடித்து விடுவோம் எனவும், இதற்கான பணி தொடரும் எனவும் கூறினார்.