சாக்கடையை சுத்தம் செய்யக்கோரி உதவி ஆணையரிடம் பொதுமக்கள் மனு

பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கீழஅடையவளஞ்சான் கிளைசெயலாளர் மாணிக்கம் ஆகியோர் ஸ்ரீரங்கம் மாநகராட்சி கோட்ட அலுவலகத்தில் உதவி ஆணையர்(பொறுப்பு) சிவபாலனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர்.

Update: 2019-06-27 22:30 GMT
ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் சிங்கர்கோவில் அருகில் உள்ள சங்கர் தோப்பு பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் கீழஅடையவளஞ்சான் கிளைசெயலாளர் மாணிக்கம் ஆகியோர் ஸ்ரீரங்கம் மாநகராட்சி கோட்ட அலுவலகத்தில் உதவி ஆணையர்(பொறுப்பு) சிவபாலனிடம் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அந்த மனுவில், ‘எங்கள் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சாக்கடையில் தண்ணீர் செல்லாமல் தேங்கி நிற்கிறது. இதனால், துர்நாற்றம் வீசுகிறது. மேலும், இரவில் கொசுத்தொல்லை தாங்க முடியவில்லை. இதனால் காய்ச்சல் மற்றும் அரிப்பு நோயால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த சாக்கடை மிகவும் ஆழமாகவும், திறந்தே கிடப்பதால் ஆடு, மாடுகள் தவறி விழுந்து விடுகின்றன. எனவே சாக்கடையில் கழிவுநீர் தேங்காமல் நடவடிக்கை எடுப்பதோடு, சாக்கடையின் மேல் சிலாப் போட்டு மூட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. 

மேலும் செய்திகள்