வானவில் : கார் பராமரிப்பு சம்பந்தமான கேள்வியும் - பதிலும்

சென்னையில் இருக்கும் வாகன பராமரிப்பு நிறுவனத்தை சேர்ந்த சுதிர் நடராஜன், கார் பராமரிப்பு சம்பந்தமான கேள்விக்கு விடை அளிக்கிறார்.

Update: 2019-06-26 07:01 GMT
மோட்டார் சைக்கிளை அங்கீகாரம் பெற்ற சர்வீஸ் மையங்களில்தான் சர்வீஸ் செய்ய வேண்டுமா? தனியார் மெக்கானிக்கிடம் சர்வீஸ் செய்வதால் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா?

முன்பெல்லாம் வாகனங்களுக்கான சேவை மையங்கள் மிகக் குறைவு. ஆனால் இப்போது விற்பனைக்கு பிந்தைய சேவையை அளிப்பதில் நிறுவனங்கள் மிகுந்த தீவிரத்துடன் உள்ளன. நீங்கள் வைத்திருக்கும் வாகனத்தின் தன்மை, அதில் பழுது நேர்ந்தால் எந்தப் பகுதி பாதிப்புக்குள்ளாகும் என்ற விவரம் நிறுவன பழுது நீக்கு மையங்களில் உள்ள மெக்கானிக்குகளால் எளிதில் கண்டுபிடிக்க முடியும். மேலும் உங்கள் வாகனத்துக்குரிய உதிரி பாகங்களும் நம்பகமானதாக இருக்கும்.

அங்கீகாரம் பெறாத மெக்கானிக்குகளுக்கு உங்கள் வாகனத்தில் எங்கு பழுது ஏற்பட்டுள்ளது என்று கண்டுபிடிக்க கால தாமதம் ஏற்படும். மாற்றும் உதிரி பாகங்கள் நிறுவனத்தின் தயாரிப்புதானா என்பதற்கு எவருமே உத்தரவாதம் அளிக்க முடியாது. சர்வீஸ் சென்டரில் விடுவதால் வரி செலுத்த வேண்டியிருக்கும். இத்தகைய வரி செலுத்துவதை தவிர்த்து விட்டு தனியார் மெக்கானிக்கிடம் சென்றால் பிறகு அங்கீகாரம் பெற்ற மையங்களில் திரும்ப சேவை பெறுவது சிரமம். அங்கீகாரம் பெற்ற விற்பனையகங்களில் வாகனத்தின் முழு தகவலும் அவர்களுக்கு அத்துபடியாக இருக்கும்

மேலும் செய்திகள்