வானவில் : வந்துவிட்டது மஹிந்திரா தார் 700
சாகசப் பயணங்களுக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள தார் மாடலில் புதிய ரகத்தை மஹிந்திரா அண்ட் மஹிந்திரா அறிமுகப்படுத்தியுள்ளது. தார் 700 என்ற பெயரில் இது அறிமுகமாகியுள்ளது. இந்நிறுவனம் மொத்தமே 700 வாகனங்களை மட்டுமே இப்பிரிவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
தார் மாடலில் மேற்பகுதி கேன்வாஸால் ஆனது. புதிய பாதுகாப்பு விதிகளின்படி வாகனங்கள் கிராஷ் டெஸ்ட், அதாவது விபத்து சோதனை விதிகளை பூர்த்தி செய்ய வேண்டும். அந்த வகையில் தார் வாகனத்தை முழுமையாக மாற்றம் செய்ய உள்ளது. இந்நிலையில் இப்பிரிவில் 700 தார் மாடல் களை தயாரிக்கமுடிவு செய்துள்ளது. இதன் விலை ரூ.10 லட்சமாகும். 15 அங்குலம் கொண்ட ஐந்து ஸ்போக் அலாய் சக்கரம் இதன் சிறப்பம்சம்.
இதற்கு முன்பு இத்தகைய சக்கரங்கள் நிறுவனத்தின் பிற பிரீமியம் தயாரிப்பான மராஸோ, முந்தைய தலைமுறை ஸ்கார்பியோ மாடல்களில் இத்தகைய அகலமான சக்கரங்கள் பயன்படுத்தப்பட்டன. இது 2.5 லிட்டர் சி.ஆர்.டி.இ. என்ஜினைக் கொண்டது. 5 கியர்கள் உள்ளன. ஏ.பி.எஸ்., பார்க்கிங் சென்சார், சீட் பெல்ட் ரிமையண்டர் ஆகிய வசதிகள் உள்ளன.