வானவில் : எம்.வி. அகுஸ்டா எப் 3. ஆர்.சி. அறிமுகம்
இத்தாலியை சேர்ந்த ரேஸ் மாடல் மோட்டார் சைக்கிளைத் தயாரிக்கும் எம்.வி. அகுஸ்டா நிறுவனம் எப்3.ஆர்.சி. மாடல் மோட்டார் சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இதன் விலை ரூ.22 லட்சம். இந்தியாவில் மொத்தம் 6 மோட்டார் சைக்கிளை மட்டுமே விற்பனை செய்ய நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
லிமிடெட் எடிஷன் எனப்படும் இந்த மாடல் மோட்டார் சைக்கிள் மூன்று வண்ணக் கலவைகளை ஒருங்கே கொண்டதாக வந்துள்ளது. இது 798 சி.சி. திறன் கொண்ட 3 சிலிண்டர் என்ஜினைக் கொண்டது. 153 ஹெச்.பி. திறனை 13,250 ஆர்.பி.எம். வேகத்திலும், 88 நியூட்டன் மீட்டர் இழுவிசையை 10,600 ஆர்.பி.எம்.மிலும் வெளிப்படுத்தக் கூடியது. எஸ்.சி. பிராஜெக்ட் எக்ஸாஸ்ட், அனோடைஸ்டு அலுமினியம் ரியர் வியூ மிரர், அலுமினியம் பிரேக் மற்றும் கிளட்ச் லீவர், பைபர் கிளாஸ் சீட் கவர், ஸ்பெஷல் எடிஷன் சான்று உள்ளிட்டவை இதன் சிறப்பம்சங்கள்ஆகும்.