மொரப்பூர் அருகே, குடிநீர் கேட்டு அரிசி, அடுப்பு, காய்கறிகளுடன் ஆர்ப்பாட்டத்துக்கு திரண்ட மக்கள்
மொரப்பூர் அருகே, குடிநீர் கேட்டு அரிசி, அடுப்பு, காய்கறிகளுடன் கிராமமக்கள் ஆர்ப்பாட்டத்துக்கு திரண்டனர். அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டது.
பொம்மிடி,
தர்மபுரி மாவட்டம் மொரப்பூரை அடுத்த அண்ணல் நகர் மற்றும் ராசலாம்பட்டி பகுதிகளில் சுமார் 1,500 குடும்பத்தினர் வசித்து வருகிறார்கள். இந்த பகுதிகளில் குடிநீர் பிரச்சினை இருந்து வருகிறது. இதுகுறித்து அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் போதிய குடிநீர் இல்லாமல் கிராமமக்கள் அவதிப்பட்டனர்.
இந்தநிலையில் குடிநீர் கேட்டு ஆர்ப்பாட்டம் நடத்த கிராமமக்கள் முடிவெடுத்தனர். இதனைத்தொடர்ந்து நேற்று காலை சந்தைமேடு பஸ் நிறுத்தத்தில் 100-க்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். அப்போது அரிசி, பருப்பு, காய்கறிகள், அடுப்பு, பாத்திரங்கள், குடம் மற்றும் பொருட்களை தரையில் வைத்து இருந்தனர். அவற்றுடன் சிலர் அமர்ந்து இருந்தனர். தண்ணீர் வேண்டும் என்று எழுதிய அட்டையையும் அருகில் வைத்து இருந்தனர்.
பேச்சுவார்த்தை
கிராமமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்த திரண்டது பற்றிய தகவல் அறிந்ததும் மொரப்பூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விமலன், ஜெயராமன், மொரப்பூர் போலீசார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது பொதுமக்கள் கூறும்போது, எங்கள் பகுதியில் சில மாதங்களாக குடிநீர் தட்டுப்பாடு இருந்து வருகிறது. குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் சிரமப்பட்டு வருகிறோம். எங்களுக்கு குடிநீர் வழங்க உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
இதற்கு உடனே நடவடிக்கை எடுக்கிறோம் என்று கூறிய வட்டார வளர்ச்சி அலுவலர்கள் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கூறினார்கள். இதில் உடன்பாடு ஏற்பட்டது. இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.