அரசு வேலைவாய்ப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி வால்மீகி சமூக மக்கள் திடீர் சாலை மறியல்
அரசு வேலைவாய்ப்பில் 7.5 சதவீத இடஒதுக்கீடு வழங்க கோரி வால்மீகி சமூக மக்கள் திடீரென சாலைமறியலில் ஈடுபட்டதால் பெங்களூருவில் போக்குவரத்து ஸ்தம்பித்தது.
பெங்களூரு,
கர்நாடகத்தில் அரசு வேலைவாய்ப்பு மற்றும் கல்வி நிறுவனங்களில் வால்மீகி சமூகத்திற்கு 7.5 சதவீத இட ஒதுக்கீடு வழங்க கோரி அந்த சமூக மக்கள், மடாதிபதி பிரசன்னானந்தபுரி சுவாமி தலைமையில் தாவணகெரே மாவட்டம் ஹரிஹர தாலுகாவில் உள்ள ராஜண்ணஹள்ளியில் இருந்து பெங்களூருவை நோக்கி பாதயாத்திரை தொடங்கினர். இந்த பாதயாத்திரை கடந்த 16 நாட்களாக நடைபெற்று, நேற்று பெங்களூருவை வந்தடைந்தது.
பாதயாத்திரையில் ஈடுபட்ட மக்கள் பெங்களூரு விதான சவுதா முன்பு திடீரென சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் மிகவும் பரபரப்பாக இருக்கும் அந்த சாலையில் வாகனங்கள் ஸ்தம்பித்து நின்றன. இதன் காரணமாக விதான சவுதாவை சுற்றியுள்ள சாலைகளிலும் போக்குவரத்து நெரிசல் உண்டானது. இதனால் காலையில் அலுவலகங்களுக்கு சென்றவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் இடையே சில 2 சக்கர வாகன ஓட்டிகள் செல்ல முயற்சி செய்தனர். இதனால் கடும் கோபம் அடைந்த போராட்டக்காரர்கள், அந்த வாகனங்களை தடுத்து நிறுத்தி சாவியை எடுக்க முயற்சி செய்தனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவுக்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் உடனே அங்கு விரைந்து வந்து, போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அவர்கள் தங்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வரை இங்கிருந்து போக மாட்டோம் என்று திட்டவட்டமாக கூறினர். இதையடுத்து விதான சவுதா சாலை மூடப்பட்டது. வாகனங்கள் வேறு சாலையில் திருப்பி விடப்பட்டன. அதன் பிறகு சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் சுதந்திர பூங்காவுக்கு சென்றனர். அங்கும் அவர்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு பா.ஜனதாவை சேர்ந்த ஸ்ரீராமுலு எம்.எல்.ஏ., முன்னாள் மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி ஆகியோர் நேரில் வந்து ஆதரவு தெரிவித்தனர். நடிகர் சுதீப், சமூக வலைதளம் மூலமாக வீடியோ ஒன்றை வெளியிட்டு ஆதரவு தெரிவித்தார்.
போராட்டக்காரர்கள், முதல்-மந்திரி குமாரசாமி இங்கு வந்து எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்தால் மட்டுமே இங்கிருந்து செல்வோம் என்று கூறினர். இதையடுத்து போராட்டக்காரர்களின் பிரதிநிதிகளை அழைத்து முதல்-மந்திரி குமாரசாமி விதான சவுதாவில் வைத்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
அப்போது குமாரசாமி, “வால்மீகி சமூகத்திற்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை அதிகரிப்பது குறித்து அடுத்த மந்திரிசபை கூட்டத்தில் விவாதிக்கப்படும். இதுகுறித்து ஆய்வு செய்ய மந்திரிசபை துணை குழு ஒன்று அமைக்கப்படும். அந்த குழு வழங்கும் அறிக்கையின் அடிப்படையில் 2 மாதத்திற்குள் முடிவு எடுக்கப்படும்“ என்று கூறினார். அதை ஏற்க மறுத்த போராட்டக்காரர்கள், இடஒதுக்கீட்டை உயர்த்துவது குறித்து உறுதியான வாக்குறுதி அளித்தால் மட்டுமே இங்கிருந்து கலைந்து செல்வோம் என்றும், முதல்-மந்திரி குமாரசாமி போராட்ட களத்திற்கு வர வேண்டும் என்றும் கூறினர்.
இதையடுத்து முதல்-மந்திரி சார்பில் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் சுதந்திர பூங்காவுக்கு சென்று அங்கிருந்த போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இட ஒதுக்கீட்டை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற 2 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போராட்டத்தை தற்போது கைவிட வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இதுகுறித்து மடாதிபதி பிரசன்னானந்தபுரி சுவாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “வால்மீகி சமூகத்திற்கு வழங்கப்படும் இட ஒதுக்கீட்டை 7.5 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று நாங்கள் வலியுறுத்தி கடந்த 16 நாட்களாக பாதயாத்திரை நடத்தி இன்று (நேற்று) பெங்களூருவில் போராட்டம் நடத்துகிறோம். 2 மாதங்களில் எங்கள் கோரிக்கையை நிறைவேற்றுவதாக கர்நாடக அரசு உறுதியளித்துள்ளது. இதை ஏற்று நாங்கள் போராட்டத்தை தற்போது வாபஸ் பெறுகிறோம். 2 மாதங்களுக்குள் வாக்குறுதியை நிறைவேற்றாவிட்டால் மீண்டும் தீவிரமாக போராட்டம் நடத்துவோம். எங்கள் சமூகத்தை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் பதவியை ராஜினாமா செய்வார்கள்“ என்றார்.