நெம்மேலியில் புதிய கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் 20 ஏக்கர் நிலத்தை சமன்படுத்தும் பணி தீவிரம்
நெம்மேலியில் 20 ஏக்கர் பரப்பளவில் புதிய கடல்நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட உள்ளது. அந்த நிலத்தை சமன்படுத்தும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
மாமல்லபுரம்,
காஞ்சீபுரம் மாவட்டம், மாமல்லபுரம் அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள நெம்மேலியில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடல் நீர் சுத்திகரிக்கப்பட்டு நாள் ஒன்றுக்கு 10 கோடி லிட்டர் குடிநீர் சோழிங்கநல்லூர், பள்ளிக்கரணை, திருவான்மியூர், பாலவாக்கம், ஈஞ்சம்பாக்கம், காரப்பாக்கம், பெருங்குடி, வேளச்சேரி, கொட்டிவாக்கம், அடையார், பெசன்ட்நகர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கு நாள்தோறும் வினியோகிக்கப்படுகிறது.
தற்போது கடும் வறட்சியால் சென்னை நகர மக்கள் குடிநீருக்காக அவதிப்பட்டு வருகின்றனர். இதையடுத்து பொதுமக்களின் கூடுதல் குடிநீர் தேவைக்காக நெம்மேலியில் தற்போது உள்ள குடிநீர் நிலையத்துக்கு அருகாமையில் உள்ள 20 ஏக்கர் நிலத்தில் கடல் நீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இங்கு இருந்து தினந்தோறும் 15 கோடி லிட்டர் குடிநீர் வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
அதற்காக 20 ஏக்கர் பரப்பளவு நிலம் தேர்வு செய்யப்பட்டு சாலை அமைக்கும் எந்திரங்கள் மூலம் சமன்படுத்தும் பணி தற்போது தீவிரமாக நடந்து வருகிறது. நிலம் சமன்படுத்தும் பணி முடிந்தவுடன் இந்த மாத இறுதியில் சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமான பணிகளை தொடங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இதற்கிடையே இங்கு இருந்து சுத்திகரிக்கப்படும் குடிநீரை நெம்மேலி ஊராட்சி பகுதி மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் பகிர்ந்து அளிக்க வேண்டும் என்றும், புதிய குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்க வேண்டும் என்றும் பொதுமக்கள் சார்பில் நெம்மேலி ஊராட்சி முன்னாள் தலைவர் நாகப்பன் உள்ளாட்சி துறை நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.