பணத்தை திருப்பி கேட்டவரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சிவசேனா முன்னாள் கவுன்சிலர் கைது
பணத்தை திருப்பி கேட்டவரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சிவசேனா முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
தானே,
பணத்தை திருப்பி கேட்டவரை நோக்கி துப்பாக்கியால் சுட்ட சிவசேனா முன்னாள் கவுன்சிலர் கைது செய்யப்பட்டார்.
பணப்பிரச்சினை
தானே பகுதியை சேர்ந்தவர் மங்கேஷ் வாக். சிவசேனா முன்னாள் கவுன்சிலர். இவர் மனிஷ் குல்வே என்பவரிடம் ஒரு வேலைக்காக ரூ.10 லட்சத்து 50 ஆயிரம் வாங்கி இருக்கிறார். ஆனால் அவர் அந்த வேலையை செய்து கொடுக்கவில்லை. இதையடுத்து மனிஷ் குல்வே தான் கொடுத்த பணத்தை திருப்பிகேட்டார். ஆனால் மங்கேஷ் வாக் அந்த பணத்தை கொடுக்க மறுத்து உள்ளார். அவரிடம் மேலும் ரூ.4 லட்சம் கேட்டு உள்ளார்.
சம்பவத்தன்று பணப்பிரச்சினை தொடர்பாக இருவருக்கும் இடையே பயங்கர வாக்குவாதம் உண்டானது.
முன்னாள் கவுன்சிலர் கைது
இதில் கடும் கோபம் அடைந்த மங்கேஷ் வாக் தான் வைத்திருந்த துப்பாக்கியால் மனிஷ் குல்வேயை நோக்கி சுட்டு உள்ளார். சுதாரித்து கொண்ட மனிஷ் குல்வே குனிந்து கொண்டார். இதனால் துப்பாக்கி குண்டில் இருந்து அவர் உயிர் தப்பினார். பின்னர் இந்த சம்பவம் குறித்து அவர் நவ்பாடா போலீசில் புகார் கொடுத்தார்.
அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மங்கேஷ் வாக்கை கைது செய்தனர். அவர் மீது கொலை முயற்சி, பணம் பறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.