பல்லாவரம் அருகே பர்னிச்சர் நிறுவனத்தில் தீ விபத்து
பல்லாவரம் அருகே பர்னிச்சர் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமாயின.
தாம்பரம்,
சென்னை பல்லாவரம் அடுத்த பம்மல் நாகல்கேணி அண்ணாசாலையில் சுழல் மெத்தை, நாற்காலிகள் தயாரிக்கும் தனியாருக்கு சொந்தமான பர்னிச்சர் நிறுவனம் உள்ளது. இந்த நிறுவனத்தில் 35 பேர் வேலை பார்த்து வருகின்றனர்.
நேற்று மதியம் இந்த நிறுவனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ மளமளவென கட்டிடம் முழுவதும் பரவியது. உடனடியாக அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்து வெளியே ஓடிவந்தனர்.
பஞ்சுமெத்தைகள், மரப்பொருட்கள் என்பதால் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த பகுதி முழுவதும் கரும்புகை மண்டலமாக மாறியது.
இதுபற்றி தகவல் அறிந்ததும் 4 தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் சுமார் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
எனினும் தீ விபத்தில் விற்பனைக்கு தயாராக இருந்த பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள பர்னிச்சர் பொருட்கள் மற்றும் அவற்றை தயாரிக்க பயன்படும் மூலப்பொருட்கள் எரிந்து நாசமாயின.
மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதுபற்றி சங்கர் நகர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.