பல்வேறு இடங்களில் பிடிபட்ட புள்ளிமான்கள் முண்டந்துறை வனப்பகுதியில் விடப்பட்டன
பல்வேறு இடங்களில் பிடிபட்ட புள்ளிமான்கள், குரங்குகள் பாபநாசம் முண்டந்துறை வனப்பகுதியில் விடப்பட்டன.
அம்பை,
பல்வேறு இடங்களில் பிடிபட்ட புள்ளிமான்கள், குரங்குகள் பாபநாசம் முண்டந்துறை வனப்பகுதியில் விடப்பட்டன.
புள்ளிமான்கள்
சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் குடியிருப்பு பகுதி, விளைநிலங்களில் புகுந்த புள்ளிமான்களை மீட்டு, அந்தந்த வனத்துறை முகாம் அலுவலகங்களில் பராமரித்தனர். பின்னர் அந்த புள்ளிமான்களை சென்னை வனத்துறை அலுவலகத்துக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து அங்கிருந்து 10 புள்ளிமான்களை கன்டெய்னர் லாரி மூலம் நேற்று பாபநாசம் முண்டந்துறை வனச்சரக அலுவலகத்துக்கு கொண்டு வந்தனர். பின்னர் முண்டந்துறை உள்வனப்பகுதியில் அந்த புள்ளிமான்களை கன்டெய்னர் லாரியில் இருந்து திறந்து விட்டனர்.
குரங்குகள்
இதேபோன்று பாபநாசம் மணிமுத்தாறு அருவி பகுதியில் சுற்றுலா பயணிகளுக்கு இடையூறாக சுற்றி திரிந்த 30 குரங்குகளை நேற்று வனத்துறையினர் கூண்டு வைத்து பிடித்தனர். பின்னர் அவற்றையும் முண்டந்துறை உள்வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர்.