பண்டாரவிளை சுயம்புலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம் திரளான பக்தர்கள் தரிசனம்
பண்டாரவிளை சுயம்புலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
ஏரல்,
பண்டாரவிளை சுயம்புலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனம் செய்தனர்.
கும்பாபிஷேகம்
ஏரல் அருகே உள்ள பண்டாரவிளை சுயம்புலிங்க சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 18-ந்தேதி தொடங்கி நடந்து வந்தது. இதையொட்டி தினமும் பல்வேறு பூஜைகள் நடந்தன.
விழாவின் சிகர நிகழ்ச்சியான கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி காலையில் 4-ம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து கோவில் விமானத்துக்கும், சுயம்புலிங்க சுவாமி மற்றும் பரிவார தேவதைகளுக்கும் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அன்னதானம்
பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சண்முகநாதன் எம்.எல்.ஏ., அவருடைய மனைவி ஆஷா சண்முகநாதன், எஸ்.பி.எஸ்.ராஜா, பண்டாரவிளை வைத்தியர்கள் முருகேசன், சிவபாலன், வணிகர் சங்கங்களின் பேரவை மாநில துணை தலைவர் பெருமாள் நாடார், பல்லடம் தொழில் அதிபர் நாராயணன், பண்டாரவிளை தொழில் அதிபர்கள் திருமணிசெல்வன், சக்திவேல்முருகன் உள்பட திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா வைத்தியர் சந்திரபால் மற்றும் விழாக்குழுவினர் செய்திருந்தனர்.