நாகர்கோவிலில் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கக்கோரி சாலை மறியல் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. உள்பட 240 பேர் கைது
நாகர்கோவிலில் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கக்கோரி தி.மு.க. சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. உள்பட 240 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்,
நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் 3 நாட்களுக்கு ஒரு முறை குடிநீர் வழங்கக்கோரி தி.மு.க. சார்பில் நேற்று நாகர்கோவில் வடசேரி அண்ணா சிலை அருகே சாலை மறியல் போராட்டம் நடந்தது.
இந்த போராட்டத்துக்கு குமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். நகர செயலாளர் வக்கீல் மகேஷ் முன்னிலை வகித்தார். போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டக்குழு உறுப்பினர் அந்தோணி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் உசேன் ஆகியோர் பேசினர்.
இதில் முன்னாள் எம்.பி. ஹெலன் டேவிட்சன், முன்னாள் எம்.எல்.ஏ. பெர்னார்டு, நிர்வாகிகள் தில்லை செல்வம், பசலியான், தாமரை பாரதி, சேக்தாவூது, பெஞ்சமின், ஜவகர், சிவராஜ், ஜோசப்ராஜ், சற்குரு கண்ணன், சாய்ராம், வக்கீல் உதயகுமார், எம்.ஜே.ராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு நகர செயலாளர் மோகன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
போராட்டத்தின் போது சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசுகையில் கூறியதாவது:–
நாகர்கோவில் நகராட்சியில் எத்தனையோ ஆணையர்கள் இருந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் கோடை காலத்தில் சீராக குடிநீர் வினியோகம் செய்யாமல் இருந்தது இல்லை. குமரி மாவட்டத்தில் பிறந்த என்.எஸ்.கிருஷ்ணன் போன்றோர் நடிப்பை எல்லாம் மிஞ்சும் அளவுக்கு தற்போதைய நாகர்கோவில் மாநகராட்சி அதிகாரியின் நடிப்பு இருக்கிறது.
யாராவது அந்த அதிகாரியிடம் நேரடியாக குற்றச்சாட்டு கூறினால், குற்றச்சாட்டு கூறிய நபரை பழிவாங்கும் நோக்கில் கட்டப்பஞ்சாயத்து செய்து வருகிறார்.
சாலை மறியல், முதல் கட்ட போராட்டம் தான். இன்னும் ஒரு வார காலத்தில் குடிநீர் பிரச்சினையை சீர்செய்ய வில்லை என்றால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி அதிகாரியின் அலுவலகத்தில் தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகள் சார்பில் உள்ளிருப்பு போராட்டம் நடத்தப்படும்.
குண்டும், குழியுமாக காட்சி யளிக்கும் அவ்வை சண்முகம் சாலையை சரிசெய்யக்கூறி ஒரு வருடமாக போராடி வருகிறேன். அதை இதுவரை சரிசெய்யவில்லை. இதேபோல் வடசேரி கிராம நிர்வாக அலுவலக சாலை, சி.பி.எச். சாலை, ராமன்புதூர் முதல் பீச்ரோடு செல்லும் சாலை என 52 வார்டுகளிலும் சாலைகளை மாநகராட்சி அதிகாரி சீர் செய்யாமல் இருந்து வருகிறார். குமரி மாவட்ட மக்கள் ஏமாளிகள் அல்ல. குடிநீர் பிரச்சினை மற்றும் சாலை பிரச்சினைகளுக்கு இன்னும் ஒரு வாரகாலத்தில் தீர்வு காணாவிட்டால் மாவட்ட அளவில் போராட்டம் நடத்தி, மாவட்டத்தையே ஸ்தம்பிக்கச் செய்வோம் என்பதை மாவட்ட நிர்வாகத்துக்கும், மாநகராட்சி நிர்வாகத்துக்கும் தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. பேசினார்.
போராட்டத்தின் போது தி.மு.க. மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளை சேர்ந்த ஆண்களும், பெண்களும், நிர்வாகிகளும் சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தியதால் சுமார் அரை மணி நேரத்துக்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதையடுத்து அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட நாகர்கோவில் உதவி சூப்பிரண்டு ஜவகர் தலைமையிலான போலீசார் சுரேஷ்ராஜன் எம்.எல்.ஏ. உள்பட தி.மு.க., மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் அனைவரையும் கைது செய்து வாகனங்களில் ஏற்றி வடசேரி பகுதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்துக்கு அழைத்துச் சென்றனர். மொத்தம் 62 பெண்கள் உள்பட 240 பேர் கைது செய்யப்பட்டனர். மாலையில் அவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.