வானவில் : 50 அங்குல திரை கொண்ட கம்ப்யூட்டர்

மைக்ரோசாப்ட் நிறுவனம் 50 அங்குல திரை கொண்ட பர்சனல் கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளது.

Update: 2019-06-19 11:52 GMT
கம்ப்யூட்டர்களுக்கு முக்கிய தேவையான சாப்ட்வேர் உருவாக்கத்தில் முன்னணியில் திகழும் மைக்ரோசாப்ட் நிறுவனம் 50 அங்குல திரை கொண்ட பர்சனல் கம்ப்யூட்டரை உருவாக்கியுள்ளது. இதன் விலை 9 ஆயிரம் டாலராகும். (இந்திய மதிப்பில் சுமார் ரூ.6.30 லட்சம்). இது தொடு திரை கொண்டது. மிகப் பெரிய அலுவலக கருத்தரங்க கூடம் மற்றும் பல பணியாளர்கள் ஒருங்கிணைந்து பணியாற்றுவது போன்ற பணிகளுக்கும், கல்லூரி மாணவர்கள் புராஜெக்ட் தயாரிக்கவும் இது உதவியாக இருக்கும்.

சுவற்றில் மாட்டும் வகையிலோ அல்லது ஸ்டாண்ட் மூலமோ மாட்டி வைக்கலாம். இதில் விண்டோஸ் 10 இயங்குதளம் உள்ளது. இதன் திரை 4 கே ரெசல்யூஷனைக் கொண்டது. இதில் இன்டெல் கோர் ஐ5 பிராசஸர் உள்ளது. 8 ஜி.பி. ரேம், 128 ஜி.பி. நினைவகம் கொண்டது. ‘சர்பேஸ் ஹப் 2 எஸ்’ என்ற பெயரில் வந்துள்ள இந்த கம்ப்யூட்டரில் ஸ்கைப் வசதியும் உள்ளது. விரைவிலேயே இந்நிறுவனம் 85 அங்குல திரை கொண்ட பர்சனல் கம்ப்யூட்டரையும் அறிமுகம் செய்ய உள்ளது.

மேலும் செய்திகள்