குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை தேவை; தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கலெக்டரிடம் மனு
குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு, சீனிவாசன், தங்கப்பாண்டியன் ஆகியோர் கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
விருதுநகர்,
கலெக்டர் சிவஞானத்தை தி.மு.க. எம்.எல்.ஏ.க்களான சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, தங்கப்பாண்டியன் மற்றும் சீனிவாசன் ஆகியோர் நேற்று சந்தித்தனர்.
அப்போதுஅருப்புக்கோட்டை விருதுநகர், திருச்சுழி மற்றும் ராஜபாளையம் ஆகிய தொகுதிகளில் நிலவும் கடும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க நடவடிக்கை எடுக்்்க கோரி கலெக்டர் சிவஞானத்திடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
அருப்புக்கோட்டை நகருக்கு தினசரி 80 லட்சம் லிட்டர் குடிநீர் தேவை. ஆனால் வைகையில் இருந்து முற்றிலுமாக குடிநீர் கிடைக்காத நிலையில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர்திட்டத்தில் இருந்து 20 லட்சம் லிட்டரே தினமும் கிடைக்கிறது. இதனால் நகர் மக்கள் குடிநீர் கிடைக்காமல் போராட்டம் நடத்தும் நிலைக்கு ஆளாகி உள்ளனர். கிராமப்பகுதிகளில் இருந்தும் லாரிகளில் தண்ணீர் கொண்டுவர முடியவில்லை. கிராமப்பகுதிகளிலும் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் கிடைக்காத நிலையில் கிராம மக்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளா கின்றனர்.
எனவே தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து தடையில்லாமல் குடிநீர் கிடைக்க தனி மின்பாதை அமைக்கவும், குடிநீர்பிரச்சினையை தீர்க்க லாரிகள் மூலம் குடிநீர் வினியோகம் செய்யவும் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் நகராட்சி பகுதியில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து தினசரி 18 லட்சம் லிட்டர் தண்ணீரே கிடைத்துவரும் நிலையில் இதர நிலத்தடி நீர் ஆதாரம் வறண்டு விட்டதால் ஒண்டிப்புலி குவாரியில் இருந்து ஓரளவு குடிநீர் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது. எனினும் 15 நாட்களுக்கு ஒரு முறை தான் குடிநீர் வினியோகம் செய்யப்படும் நிலை உள்ளது.
விருதுநகரை ஒட்டி உள்ள ரோசல்பட்டி பஞ்சாயத்திலும், எரிச்சநத்தம், குமிழங்குளம், நடையனேரி உள்ளிட்ட பஞ்சாயத்து பகுதிகளிலும் விருதுநகரை யூனியனில் உள்ள கிராமப்பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை கடுமையாக உள்ளது. கிராமப்பகுதிகளில் பஞ்சாயத்து செயலர்களும், பம்பு ஆப்ரேட்டர்களும் கிடைக்கும் நீர் ஆதாரத்தை கொண்டு முறையாக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்த வேண்டும். தென்மேற்கு பருவ மழை தொடங்கும் முன்பு ஆனைக்குட்டம் அணையில் இருந்து நீர் வெளியேறுவதை தடுக்க ஷட்டர்களை பழுது பார்க்க வேண்டும். விருதுநகர் தொகுதி முழுவதும் தேவைப்படும் இடங்களில் லாரிகள் மூலம் குடிநீர்வினியோகம் செய்யவும், கிராமப்பகுதியில் ஆழ்துளை கிணறுகள் தோண்டவும், ஆனைக்குட்டம் அணைப்பகுதியில் கூடுதலாக உறை கிணறுகள் தோண்டவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
திருச்சுழி தொகுதியில் காரியாபட்டி, மல்லாங்கிணறு ஆகிய பேரூராட்சிகளும், நரிக்குடி, காரியாபட்டி, திருச்சுழி ஆகிய யூனியன்கள் உள்ளன. காரியாபட்டி பேரூராட்சியில் 18,191 பேரும், மல்லாங்கிணறில் 12,986 பேரும் வசித்து வரும் நிலையில் இந்த பகுதிகளில் தாமிரபரணி கூட்டுக்குடிநீர் திட்டத்தில் இருந்து குடிநீர் முற்றிலுமாக கிடைக்காத நிலையில் நிலத்தடி நீர் ஆதாரங்கள் வறண்டு விட்டதால் மக்கள் குடிநீருக்காக அவதிப்படும் நிலை உள்ளது.
கிராமப்பகுதிகளில் குடிநீருக்காக மக்கள் போராட்டம் நடத்துவதால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகளும் ஏற்படுகிறது. கிராம மக்கள் 5 கிலோ மீட்டர் முதல் 10 கிலோ மீட்டர் தூரம் வரை நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் நிலை உள்ளது. எனவே திருச்சுழி தொகுதியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜபாளையம் நகர் பகுதியிலும், ராஜபாளையம் தொகுதியில் உள்ள கிராமப்புறங்களிலும் கடுமையான குடிநீர் பிரச்சினை உள்ளது. கிராம பஞ்சாயத்துகளில் முறையான குடிநீர் வினியோகத்துக்கு நடவடிக்கை இல்லாததால் கிராம மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள்.
எனவே ராஜபாளையம் நகர் பகுதியிலும், தொகுதியில் உள்ள கிராமப்பகுதியிலும் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காண போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளது.