நெல்லையப்பர் கோவில் ஆனித்திருவிழா: பிள்ளையார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேேராட்ட திருவிழாவையொட்டி நேற்று பிள்ளையார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

Update: 2019-06-18 22:00 GMT
நெல்லை, 

நெல்லையப்பர் கோவிலில் ஆனித்தேேராட்ட திருவிழாவையொட்டி நேற்று பிள்ளையார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

நெல்லையப்பர் கோவில்

நெல்லையப்பர் கோவில் பாண்டியர் கால சிவ ஆலங்களில் பழமையானதாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு மாதமும் ஒவ்வொரு திருவிழா நடைபெறுவது வழக்கம். இருந்தாலும் ஆனி மாதம் 10 நாட்கள் நடைபெறுகின்ற தேரோட்ட திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும்.

இந்த ஆண்டுக்கான ஆனித்தேரோட்டம் அடுத்த மாதம்(ஜூலை) 14-ந்தேதி நடக்கிறது. விழா வருகிற 6-ந்ேததி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா தொடங்குவதற்கு முன்பு முதலில் நெல்லை டவுனின் காவல் தெய்வமான புட்டாபிராத்தி அம்மன் கோவில் திருவிழா நடைபெறும். அதன் பிறகு பிள்ளையார் திருவிழா நடைபெறும். அதன் பிறகு தான் ஆனிித்திருவிழா தொடங்கும். இந்த ஆண்டுக்கான புட்டாபிராத்தி அம்மன் கோவில் திருவிழா நடந்து முடிந்து விட்டது.

பிள்ளையார் திருவிழா

இந்தநிலையில் நேற்று பிள்ளையார் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமி சன்னதியில் உள்ள சின்ன கொடி மரத்தில் நேற்று காலை 8 மணிக்கு பிள்ளையார் கொடி ஏற்றப்பட்டது.

அப்போது அங்கு கூடியிருந்த பக்தர்கள் பக்தி கோஷங்கள் எழுப்பினார்கள். இதைத்தொடர்ந்து கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனை நடந்தது. மாலையில் பிள்ளையார் மூஞ்சுறு வாகனத்தில் வீதி உலா நடந்தது. விழா நாட்களில் தினமும் காலையிலும், மாலையிலும் சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனையும்், வீதி உலாவும் நடக்கிறது.

வருகிற 22-ந்தேதி(சனிக்கிழமை) முதல் மூவரான அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் திருவிழா தொடங்குகிறது.

தேரோட்டம்

ஆனித்தேரோட்ட திருவிழா 6-ந்தேதி காலை 7-30 மணிக்கு மேல் 8-54 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 14-ந்தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 8-30 மணிக்கு நடக்கிறது.

மேலும் செய்திகள்