வத்திராயிருப்பில் 4 மாதமாக குடிநீர் வழங்காததால் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முற்றுகை

4 மாதமாக குடிநீர் வழங்காததால் பாதிக்கப்பட்டோர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டனர்.

Update: 2019-06-17 23:15 GMT
வத்திராயிருப்பு,

வத்திராயிருப்பு அருகே அம்மாபட்டி ஊராட்சியில் 6 வார்டுகள் உள்ளன. இந்த பகுதியில் உள்ள வடக்கு குப்புனாபுரம் 5 மற்றும் 6-வது வார்டில் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் கடந்த 4 மாதங்களாக முறையாக குடிநீர் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து ஊராட்சி ஒன்றிய அலுவலரிடமும் மாவட்ட நிர்வாகத்திடமும் பலமுறை மனுக்கள் கொடுத்தும் தற்போது வரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப் படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று காலை காலி குடங்களுடன் வத்திராயிருப்பு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஊராட்சி ஒன்றிய அலுவலர் சிவக்குமார்், வத்திராயிருப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதோடு அனைத்து அடிப்படை வசதிகளும் உடனடியாக செய்து தரப்படும் என உறுதி அளித்தனர். இதைத்தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர்.

மேலும் செய்திகள்