கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல மையத்தில் இருந்து, லாரியில் ஏற்றி சென்ற விடைத்தாள் கட்டுகள் சாலையோரம் சரிந்ததால் பரபரப்பு
கோவை அண்ணா பல்கலைக்கழக மண்டல மையத்தில் இருந்து லாரியில்ஏற்றி சென்ற விடைத்தாள் கட்டுகள் சாலையோரம் சரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
வடவள்ளி,
கோவைவடவள்ளியில்அண்ணா பல்கலைக்கழகமண்டல மையம் உள்ளது. இங்கு மாணவ-மாணவிகள் தேர்வு எழுதிய பழைய விடைத்தாள்கள் இருப்பு வைக்கப்படுவது வழக்கம். ஒரு குறிப்பிட்ட காலத்தில் இந்த விடைத்தாள்கள் லாரி மூலம் இங்கிருந்து கரூரில் உள்ள தமிழகஅரசுக்கு சொந்தமானகாகிதநிறுவனத்திற்கு கொண்டுமறு சுழற்சிக்காக கொண்டுசெல்லப்படும்.
இதைதொடர்ந்து அண்ணா பல்கலைக்கழகமண்டல அலுவலகத்தில் இருந்து கரூருக்குவிடைத்தாள்களை கொண்டுசெல்ல முடிவு செய்யப்பட்டது. இதற்காக நேற்று விடைத்தாள்களை லாரியில் ஏற்றி, எடைபோடுவதற்காக கணுவாய் பகுதிக்குஅனுப்பப்பட்டது. இந்த நிலையில் விடைத்தாள்கள்ஏற்றி சென்றலாரி,வடவள்ளிசந்தைப்பேட்டை அருகே சென்றபோதுநிலைத்தடுமாறிபக்கவாட்டில்லேசாக சாய்ந்துவிபத்துக்குள்ளானது. உடனே டிரைவர் லாரியை ஓரங்கட்டி விட்டார்.
இதில் லாரியில் இருந்து விடைத்தாள் கட்டுகள் சரிந்து கீழே விழுந்தன. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்ததகவலின்பேரில் பல்கலைக்கழக மண்டல மையத்தில் இருந்து வந்த பேராசிரியர்கள் தலைமையிலான குழுவினர் அந்த லாரியில் இருந்த விடைத்தாள்களை எடுத்து, மற்றொரு லாரியில் ஏற்றி அனுப்பி வைத்தனர். இந்த விடைத்தாள்கள் அனைத்தும் மதிப்பீடு செய்யப்பட்டு மதிப்பெண்கள்பதிவேற்றம்செய்யப்பட்டு விட்டது. அதனால்எந்த பிரச்சினையும்இல்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.
விடைத்தாள்கள் கீழே விழுந்ததால்அந்த பகுதியில்3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்தனர். இதுகுறித்து அவர்கள் கூறுகையில் லாரியில் 2 மடங்கு அதிகமான விடைத்தாள்கள் ஏற்றப்பட்டு, கொண்டு சென்றதுதான்விபத்திற்கு காரணம்ஆகும். இனிமேல் இதுபோன்ற விபத்துகள் ஏற்படாமல்இருக்க சம்பந்தப்பட்டஅதிகாரிகள் முறையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.