கிராமிய அஞ்சல் ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் சங்க மாநில மாநாட்டில் வலியுறுத்தல்

கிராமிய அஞ்சல் ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என சங்க மாநில மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டது.

Update: 2019-06-16 22:45 GMT
கரூர்,

கரூரில் அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க மாநில மாநாடு நடைபெற்றது. கூட்டத்திற்கு அகில இந்திய பொதுச்செயலாளர் மகாதேவய்யா தலைமை தாங்கினார். இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர்கள் சங்க தமிழ் மாநில செயலாளர் இஸ்மாயில் முன்னிலை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் கரூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் சாகுல்அமீது, மாநில முதன்மை ஆலோசகர் ஜான்பிரிட்டோ ஆகியோர் கலந்து கொண்டு முக்கிய கோரிக்கைகள் குறித்து பேசினர்.

ஓய்வூதியம் வழங்க வேண்டும்

கூட்டத்தில் இந்தியா முழுவதும் 3½ லட்சம் ஊழியர்கள் இருப்பதால், அவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். காலநிலை ஊதியம் வழங்க வேண்டும். கிராமிய அஞ்சல் ஊழியர்கள் அனைவருக்கும் முறையான சீருடை வழங்க வேண்டும். மேலும் ஊழியர் களுக்கு வழங்கப்பட்டுள்ள கையடக்க கருவிகள் சரியாக இயங்குவதில்லை, அதனை மாற்றி வழங்க வேண்டும்.

கிராம அஞ்சல் ஊழியர்கள் அனைவருக்கும் ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முடிவில் கோட்ட செயலாளர் கருணாநிதி நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்