செங்கோட்டையில் இருந்து வைகை எக்ஸ்பிரசுக்கு இணைப்பு ரெயில் விட வேண்டும்; ஓய்வூதியர்கள் மாநாட்டில் தீர்மானம்
வைகை எக்ஸ்பிரசுக்கு செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரெயில் விட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீவில்லிபுத்தூர்,
தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர்கள் சங்க கிளை மாநாடு சக்கரைக்குளத்தெருவில் உள்ள சிவநாச்சியார் தொடக்கப்பள்ளியில் நடைபெற்றது. கருப்பையா தலைமை வகித்தார். முத்துக்குருசாமி, எம்.கருப்பையா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
குமரவேல் சங்க கொடி ஏற்றி வைத்தார். மூத்த உறுப்பினர் பழனிசாமி வரவேற்று பேசினார். செயலாளர் பிலாவடியான் வேலை அறிக்கையும், பிரகாசம் நிதிநிலை அறிக்கையும் சமர்ப்பித்தனர்.
ஓய்வூதியர்கள் சங்க மாநில துணைத்தலைவர் சுந்தரமூர்த்தி தொடக்க உரையாற்றினார். மாநில துணைத்தலைவர் ஜோதி, அரசு ஊழியர்கள் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லச்சாமி, அஞ்சல் துறை ஓய்வூதியர்கள்சங்க பிரதிநிதி முத்துக்குமார், பள்ளி ஆசிரியர்கள் ஓய்வூதியர்கள் சங்க மாவட்ட துணைத்தலைவர் தங்கவேல், அரசு போக்குவரத்து ஓய்வூதியர்கள் சங்க நல அமைப்பு கோவிந்தராஜ், ஊரக வளர்ச்சித் துறை ஓய்வூதியர்கள் சங்க நிர்வாகிகள் பாலகிருஷ்ணன், ராஜபாளையம் வெங்கடாசலம் மற்றும் அங்கன்வாடி சத்துணவு ஓய்வூதியர்கள் சங்க குருநாதன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகரத்தில் தலைவிரித்தாடும் குடிநீர் பிரச்சினையை தீர்க்க போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஸ்ரீவில்லிபுத்தூர் ரெயில் நிலையத்தில் பயணிகள் நலனை கருத்தில் கொண்டு, நடைமேடையை உயர்த்துவதோடு கழிவறை வசதிகள் ஏற்படுத்தவேண்டும். முன் பதிவு நேரத்தை நீட்டித்தல், நடைபாதை மேம்பாலம் அமைத்தல், கிழக்கு பகுதியில் நிழற்குடை அமைத்தல் மற்றும் மின் விளக்குகள் அமைத்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி ரெயில் ஸ்ரீவில்லிபுத்தூரில் நின்று செல்ல ஏற்பாடு செய்வதோடு சிலம்பு எக்ஸ்பிரசை தினசரி இயக்கவேண்டும். செங்கோட்டையில் இருந்து கோயம்புத்தூர், பெங்களூரு நகரங்களுக்கு புதியதாக ரெயில் விடுவதோடு,
வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலுக்கு செங்கோட்டையில் இருந்து இணைப்பு ரெயில் விட வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் மாநாட்டில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டன.
முடிவில் துணைத்தலைவர் பட்டராயன் நன்றி கூறினார்.