கோத்தகிரி அருகே ஹெத்தையம்மன் கோவில் பூசாரிகளை மாற்றக்கோரி சாலை மறியல்
கோத்தகிரி அருகே பெத்தளா ஹெத்தையம்மன் கோவில் பூசாரிகளை மாற்றக்கோரி சாலை மறியல் போராட்டம் நடந்தது.
கோத்தகிரி,
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே பெத்தளா கிராமத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற ஹெத்தையம்மன் கோவில் உள்ளது. இங்கு படுகர் சமுதாய மக்கள் வழிபாடு நடத்துகின்றனர். இந்த கோவிலில் பூசாரிகளாக பணியாற்ற இதே கிராமத்தை சேர்ந்த குட்டுமனை குடும்பத்தில் உள்ள உறுப்பினர்கள் மட்டுமே பூசாரிகளாக தேர்வு செய்யப்படுவது வழக்கம்.
கோவில் பூசாரிகளாக தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் சுமார் 18 வயதுக்குட்பட்டவர்களாக இருப்பதுடன், அவர்கள் ஒரு குறிப்பிட்ட வயதை கடந்த உடன் வேறு பூசாரிகளாக அதே குடும்பத்தில் உள்ள சிறுவர்களை தேர்வு செய்து நியமித்து வருகின்றனர்.
இதனிடையே கடந்த ஆண்டு பெத்தளா ஹெத்தையம்மன் திருவிழாவின்போது தற்போது உள்ள 3 பூசாரிகளை மாற்ற வேண்டும் என 19 கிராமங்களை சேர்ந்த ஒரு தரப்பினர் வேண்டுகோள் விடுத்தனர். ஆனால் அதற்கு மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையடுத்து அரசுத்துறை அதிகாரிகள் அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கோவில் திருவிழா முடியும் வரை தற்போது உள்ள பூசாரிகளே தொடர்வது எனவும், திருவிழா முடிந்த பிறகு குட்டுமனை குடும்பத்தை சேர்ந்த 3 புதிய பூசாரிகளை கைக்கார் சீமை பெரியவர்களின் அனுமதியுடன் நியமித்து கொள்ள வேண்டும் என முடிவு செய்யப்பட்டதாக தெரிகிறது.
ஆனால் திருவிழா முடிந்து பல மாதங்களாகியும் புதிய பூசாரிகள் நியமிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் வருகிற 24-ந் தேதி ஹெத்தையம்மன் கோவிலில் தெவ்வ ஹப்பா பண்டிகை நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக கோவில் பூசாரிகளை மாற்ற வேண்டும் என ஒருதரப்பினர் குன்னூர் உதவி கலெக்டரை நேரில் சந்தித்து வலியுறுத்தினர்.
இதையடுத்து நேற்று மதியம் 12 மணியளவில் உதவி கலெக்டரின் நேர்முக உதவியாளர் குமாரராஜா தலைமையில் பெட்டட்டியில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே பேச்சுவார்த்தையை அதிகாரிகள் ஒத்தி வைத்தனர்.
ஆனால் ஒருதரப்பினர் பண்டிகைக்கு முன்பு பூசாரிகளை மாற்றக்கோரி 19 ஊர் தலைவர் ரங்கா கவுடர் தலைமை யில் பெட்டட்டியில் இருந்து குன்னூர் செல்லும் சாலையில் அமர்ந்து திடீரென்று மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த கோத்தகிரி இன்ஸ்பெக்டர் வேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன், குன்னூர் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், கோத்தகிரி தாசில்தார் சங்கீதா ராணி, வருவாய் ஆய்வாளர் பூவேந்திரன் உள்ளிட்டோர் விரைந்து சென்று சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது அங்கு வந்த முன்னாள் அமைச்சர் இளித்தொரை ராமச்சந்திரன், குன்னூர் எம்.எல்.ஏ. சாந்தி ராமு ஆகியோர் தாசில்தாரிடம் உரிய தீர்வை காண வேண்டும் என வலியுறுத்தினர். இதையடுத்து குன்னூர் உதவி கலெக்டர் ரஞ்சித் சம்பவ இடத்திற்கு வந்து கைக்கார் சீமையை சேர்ந்த நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்டார்.
பின்னர் சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் வருகிற 20-ந் தேதிக்குள் குட்டுமனை குடும்பத்தினர் தேர்ந்தெடுக்கும் 3 பேர் பூசாரிகளாக நியமிக்கபடுவர். அவர்களது குடும்பத்தில் புதிய பூசாரிகளாக தேர்வு செய்ய உறுப்பினர் இல்லாத பட்சத்தில், கைக்கார் சீமையின் சார்பில் தேர்வு செய்யும் 3 பேரை பெத்தளா ஹெத்தையம்மன் கோவிலுக்கு பூசாரிகளாக நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றர்.
இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.