சங்கரன்கோவில் அருகே லாரிகள் மோதல்; 4 பேர் காயம்

சங்கரன்கோவில் அருகே லாரிகள் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

Update: 2019-06-15 22:00 GMT
சங்கரன்கோவில், 

சங்கரன்கோவில் அருகே லாரிகள் மோதிய விபத்தில் 4 பேர் காயமடைந்தனர்.

லாரிகள் மோதல் 

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள பெரும்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம் செல்லப்பா (வயது 45). பாரதி நகரை சேர்ந்தவர் தங்கமுத்து (35), சபாபதி நகரை சேர்ந்த முருகையா (60), ஆறுமுகசாமி (45). 4 பேரும் சங்கரன்கோவில் அருகே உள்ள கண்டிகைபேரியில் இருந்து லாரியில் செங்கல் ஏற்றிக்கொண்டு பனவடலிசத்திரத்திற்கு சென்று கொண்டிருந்தனர். லாரியை அருணாசலம் செல்லப்பா ஓட்டினார்.

லாரி சங்கரன்கோவில் அருகே உள்ள குதிரை கோவில் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் வந்த விருதுநகர் மாவட்டம் கிருஷ்ணன்கோவில் அருகே உள்ள சுந்தரப்பபுரத்தை சேர்ந்த மாரிமுத்து (39) ஓட்டி வந்த லாரியும், அருணாசலம் செல்லப்பா ஓட்டி வந்த லாரியும் எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் பயங்கரமாக மோதின.

4 பேர் காயம் 


இதில் தங்கமுத்து பலத்த காயமடைந்தார். மேலும் அருணாசலம் செல்லப்பா, முருகையா, ஆறுமுகசாமி ஆகிய 3 பேரும் லேசான காயமடைந்தனர். மாரிமுத்துவுக்கு அதிர்ஷ்டவசமாக எந்த காயமும் ஏற்படவில்லை. உடனே அருகில் இருந்தவர்கள் தங்கமுத்து உள்பட 4 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சங்கரன்கோவில் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் தங்கமுத்து மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து சின்னகோவிலான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

மேலும் செய்திகள்