அங்கீகாரம் இன்றி செயல்படும் 18 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் கலெக்டர் அறிவிப்பு

குமரி மாவட்டத்தில் அங்கீகாரம் இன்றி செயல்படும் 18 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என்று கலெக்டர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.

Update: 2019-06-11 23:00 GMT
நாகர்கோவில்,

குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தின்படி தெரிவிக்கப்பட்டுள்ளவாறு அனைத்து வகைப்பள்ளிகளும் அங்கீகாரம் பெற்றே செயல்பட வேண்டும். தற்போது குமரி மாவட்டத்தில் 18 பள்ளிகள் அங்கீகாரம் எதுவும் பெறப்படாமலேயே செயல்பட்டு வருவதாக கண்டறியப்பட்டுள்ளது.

அதன் விவரம் வருமாறு:–


நாகர்கோவில் கல்வி மாவட்டத்தில் நாகர்கோவில் ஐ.இ.எல்.சி. பப்ளிக் பள்ளி, கோட்டவிளை மைலாடி ரோடு சீயோன் கார்டன் ஆரோக்கிய அன்னை பள்ளி, கொட்டாரம் டாக்டர் அப்துல் கலாம் பள்ளி,

தக்கலை கல்வி மாவட்டத்தில் மாம்பழத்துறையாறு கிரீன்வேலி இன்டர் நே‌ஷனல் பள்ளி, கண்ணாட்டுவிளை குளோபல் பப்ளிக் பள்ளி, மணவாளக்குறிச்சி சேரமங்கலம் கோல்டன்பள்ளி, கூட்டுமங்கலம் ஷீரடி பாபா வித்யாகேந்த்ரா பள்ளி, பார்வதிபுரம் விண்மீன் பப்ளிக் பள்ளி,

குழித்துறை கல்வி மாவட்டத்தில் இனயம்புத்தன்துறை புனித மேரி பள்ளி, கிள்ளியூர் தொலையாவட்டம் புனித தேவமாதா பள்ளி, காரோடு சங்குருட்டி ரோடு ஏஞ்சல் குளோபல் பள்ளி,

திருவட்டார் கல்வி மாவட்டம் ஆனையடி சான்றோ சி.பி.எஸ்.இ. பள்ளி, அணைக்கரை மேரி மவுண்ட் பள்ளி, கழுவன்திட்டை நே‌ஷனல் பப்ளிக் பள்ளி, கணபதிபுரம் பத்மஸ்ரீ வித்யாலயா பள்ளி, களியக்காவிளை கோழிவிளை இ.சி.ஐ. பப்ளிக் பள்ளி, கூட்டப்புளி நோபிள் பப்ளிக் பள்ளி, சூழால் பாத்திமாநகர் புஷ்பகிரி லிட்டில் பிளவர் சென்ட்ரல் பள்ளி ஆகிய 18 பள்ளிகள் அங்கீகாரம் பெறாமல் செயல்படுகின்றன. இந்த 18 பள்ளிகளும் சி.பி.எஸ்.இ. பள்ளிகளாகும்.


அங்கீகாரம் இன்றி செயல்படும் இந்த பள்ளிகளில் பயிலும் மாணவ– மாணவிகள் அரசால் நடத்தப்படும் பொதுத்தேர்வு எழுத இயலாத நிலை ஏற்படும். அந்த பள்ளிகளால் வழங்கப்படும் கல்விச் சான்றுகள் தகுதியற்றதாகவும் கருதப்படும். எனவே அங்கீகாரம் இன்றி செயல்படும் இந்த பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க வேண்டாம் என பெற்றோர்களையும், பொதுமக்களையும் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கலெக்டர் பிரசாந்த் வடநேரே கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்