அழைப்பு உங்களுக்குத்தான்

...

Update: 2019-06-10 06:10 GMT
மத்திய பல்கலைக்கழகம்

திருவாரூரில் உள்ள தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகத்தில் ‘கெஸ்ட் பகல்டி’ பணியிடங்களுக்கு 88 பேரை தேர்வு செய்ய அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொழி பாடங்கள், அறிவியல் பாடங்கள், சட்டம் உள்ளிட்ட 26 பாடப்பிரிவுகளில் பணியிடங்கள் உள்ளன. நேர்காணல் அடிப்படையில் இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.

விருப்பமுள்ளவர்கள் தேவையான சான்றுகளுடன் நேரில் கலந்து கொள்ளலாம். 70 வயதுக்கு உட்பட்டவர்கள் இதில் பங்கேற்க முடியும். வருகிற 18-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை நேர்காணல் நடக்கிறது. இது பற்றிய விரிவான விவரங்களை https://cutn.ac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

ஓ.என்.ஜி.சி.

எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனத்தில் (ONGC) மருத்துவ அதிகாரி, செக்யூரிட்டி அதிகாரி தீயணைப்பு அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 107 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். 18-6-2019-ந் தேதியில் 30 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு பணி உள்ளது. எம்.பி.பி.எஸ், சி.ஏ., எம்.பி.ஏ., பி.இ., பி.டெக், பயர் என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி இணையதள விண்ணப்பம் சமர்ப்பிக்கலாம். வருகிற 18-ந் தேதி விண்ணப்பிக்க கடைசிநாளாகும். விண்ணப்பிக்கவும், விரிவான விவரங்களை தெரிந்து கொள்ளவும் www.ongcindia.com என்ற இணையதள பக்கத்தை பார்க்கலாம்.

என்ஜினீயர்ஸ் இந்தியா

பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான என்ஜினீயர்ஸ் இந்தியா லிமிடெட் (EIL) நிறுவனத்தில் மேனேஜ்மென்ட் டிரெயினி விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 79 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக்., பி.எஸ்சி. என்ஜினீயரிங் படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. 25 வயதுக்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கத் தகுதியானவர்கள். விருப்பமுள்ளவர்கள் இது பற்றிய விரிவான விவரங்களை http://www.engineersindia.com/ என்ற இணையதளத்தில் பார்த்து அறிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி நாள் 20-ந்தேதியாகும்.

என்.எம்.டி.சி.

மத்திய உருக்கு ஆணையத்தின் கீழ் செயல்படும் சுரங்க நிறுவனமான என்.எம்.டி.சி.யில், அப்ரண்டிஸ் பயிற்சிப் பணி களுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது. மொத்தம் 180 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஐ.டி.ஐ. மற்றும் என்ஜினீயரிங் பட்டதாரிகள் இந்த பயிற்சிப் பணியில் சேரலாம். விண்ணப்பதாரர் 30 வயதுக்கு உட்பட்டிருக்க வேண்டும். வருகிற 15-ந் தேதியில் இருந்து 25-ந் தேதி வரை இதற்கான நேர்காணல் நடக்கிறது. அந்தந்த பணிக்கான நேர்காணல் எந்த தேதியில் நடக்கிறது என்பதை முழுமையான அறிவிப்பில் பார்த்து அறிந்து கொண்டு நேரில் செல்லவும். முதலில் www.ncvtmis.gov.in என்ற இணையதளத்தில் பெயரை பதிவு செய்து பின்னர், நேர்காணலில் பங்கேற்க வேண்டும். இது பற்றிய விவரங்கள் www.nmdc.co.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

ரெப்கோ வங்கி

இலங்கை மற்றும் பர்மாவில் இருந்து புலம்பெயர்ந்தவர்கள் நலனுக்காக ஏற்படுத்தப்பட்ட மத்திய கூட்டுறவு வங்கியான ரெப்கோ வங்கியில், ஜூனியர் அசிஸ்டன்ட், கிளார்க் பணிக்கு 40 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பட்டதாரிகள் இந்த பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 21 முதல் 28 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். இணைய தளம் வழியாக விண்ணப்பிக்க கடைசி நாள் வருகிற 20-ந் தேதியாகும். இதற்கான ஆன்லைன் தேர்வு 7-7-2019-ந்தேதி நடக்கிறது. இது பற்றிய விவரங்களை www.repcobank.com என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

மேலும் செய்திகள்