அரியலூர் மாவட்டங்களில் ஆசிரியர் தகுதி தேர்வின் 2-ம் தாளினை 12,791 பேர் எழுதினர்
அரியலூர் மாவட்டங்களில் ஆசிரியர் தகுதி தேர்வின் 2-ம் தாளினை 12,791 பேர் எழுதினர்.
அரியலூர்,
தமிழ்நாடு அரசு ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடத்தப்படும் ஆசிரியர் தகுதி தேர்வின் முதல் தாள் தேர்வு நேற்று முன்தினம் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாளினை 2,001 பேர் எழுதினர். 290 பேர் தேர்வு எழுத வரவில்லை. இந்த தேர்வினை அரியலூர் மாவட்டத்தில் 1,859 பேர் தேர்வு எழுதினர். 238 பேர் தேர்வு எழுத வரவில்லை. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதி தேர்வின் 2-ம் தாள் தேர்வு நேற்று நடந்தது. அதன்படி பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வின் 2-ம் தாள் தேர்வு 20 மையங்களிலும், அரியலூர் மாவட்டத்தில் 16 மையங்களிலும் நடந்தது. பெரம்பலூர் மாவட்டத்தில் இந்த தேர்வினை எழுத 2,046 ஆண்களும், 5,230 பெண்களும் என மொத்தம் 7,276 பேரும், அரியலூர் மாவட்டத்தில் 7,071 பேரும் தகுதி பெற்றிருந்தனர்.
தேர்வு எழுதுவதற்கு தேர்வர்கள் காலை 9.30 மணிக்கு மையங்களுக்கு சென்றனர். முன்னதாக அவர்களின் தேர்வுக்கூட அனுமதி சீட்டினை (ஹால் டிக்கெட்) மைய அலுவலர்கள் சரிபார்த்தும், அவர்களை சோதனையிட்ட பிறகே உள்ளே அனுமதித்தனர். தேர்வு மையத்துக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை செய்யப்பட்டிருந்தது. இதையடுத்து 10 மணிக்கு வினாத்தாள் கொடுக்கப்பட்டதும், தேர்வர்கள் தேர்வு எழுத ஆரம்பித்தனர். மதியம் 1 மணிக்கு தேர்வு முடிவடைந்தது.
பெரம்பலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு 2-ம் தாள் தேர்வினை 1,883 ஆண்களும், 4,648 பெண்களும் என மொத்தம் 6,531 பேர் எழுதினர். 745 பேர் தேர்வு எழுத வரவில்லை. அரியலூர் மாவட்டத்தில் 6,260 பேர் தேர்வு எழுத வந்திருந்தனர். 811 பேர் தேர்வு எழுத வரவில்லை. பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டத்தில் ஆசிரியர் தகுதி தேர்வின் 2-ம் தாள் தேர்வினை மொத்தம் 12,791 பேர் எழுதினர். 2 மாவட்டங்களிலும் தேர்வு எழுத மொத்தம் 1,556 பேர் வரவில்லை.
தேர்வுகளை கண்காணிப்பதற்காக அலுவலர்கள் கண் காணிப்பு பணிகளில் ஈடுபட்டனர். ஒவ்வொரு தேர்வு மையத்திற்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ்காரர் ஒருவர் மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேர்வுத்தாள், வினாத்தாள் உள்ளிட்ட தேர்வுக்குரிய பொருட்களை தேர்வு கூடங்களுக்கு பாதுகாப்பாக எடுத்து செல்வதற்காக வழித்தடங்கள் ஏற்படுத்தபட்டு,அதற்கான அலுவலர்கள் நியமிக்கப்பட்டிருந்தனர். தேர்வு எழுதுபவர்கள் தேர்வு மையங்களுக்கு சென்று வர பெரம்பலூர், அரியலூர் ஆகிய மாவட்டங்களில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன.