10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை தேர்ச்சி
மராட்டியத்தில் நேற்று வெளியான 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை தேர்ச்சி பெற்றன.
மும்பை,
மராட்டியத்தில் நேற்று 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகின. இதில் தமிழர்கள் நிர்வகிக்கும் பள்ளிகள் சாதனை தேர்ச்சி விகிதத்தை எட்டியது.
மும்பை தாராவியில் தெட்சணமாற நாடார் சங்க மும்பை கிளை நிர்வகித்து வரும் காமராஜர் நினைவு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி 91 சதவீதம் தேர்ச்சி அடைந்து உள்ளது.
மாணவன் விவேக் நாடார் 92.80 சதவீத மதிப்பெண்கள் எடுத்து பள்ளியில் முதலிடமும், மாணவி வைஸ்னவ் பூஜா 91.40 சதவீத மதிப்பெண்கள் பெற்று இரண்டாவது இடமும், மாணவி பியுலா நாடார் 87.80 சதவீத மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பெற்றனர்.
காந்தி நினைவு பள்ளி
மாட்டுங்கா லேபர் கேம்பில், காந்தி நினைவு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி மாணவர்கள் 99 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
இதில், மாணவன் மனோஜ் குருசந்திரன் 89 சதவீத மதிப்பெண் எடுத்து முதலிடமும், மெஹக் பத்விஷா சேக் 87 சதவீத மதிப்பெண் பெற்று இரண்டாம் இடமும் பிடித்தனர். 86.40 சதவீத மதிப்பெண் பெற்று மாணவி ஜோதி லெட்சுமி 3-ம் இடம் பெற்றார். தேர்ச்சி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் செல்லத்துரை பாராட்டினார்.
பாண்டுப் பிரைட்
பாண்டுப் பிரைட் உயர்நிலைப்பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரியில் கோசவி யுக்தா என்ற மாணவி 88.20 சதவீத மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், ஜகன் கிஸ்மத் அப்துல் வகாப் என்ற மாணவர் 87.40 சதவீத மதிப்பெண்கள் எடுத்து 2-வது இடமும், சேக் அப்துல்கலாம் அமின் என்ற மாணவர் 83.80 சதவீத மதிப்பெண்கள் எடுத்து 3-வது இடமும் பிடித்தனர்.
அதிக மதிப்பெண் எடுத்து தேர்ச்சி அடைந்த மாணவ, மாணவியரை பம்பாய் திருவள்ளுவர் மன்ற தலைவர் ஜேம்ஸ் தேவதாசன், கல்லூரி முதல்வர் செலின் ஜேக்கப், தலைமை ஆசிரியர் ஜெஸ்டினா ஜேம்ஸ் மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தினர்.
தானேயில்..
தானேயில் நம்பிக்கையின் ஆலயம் நிர்வகிக்கும் ஹோம் ஆப் பேத் பள்ளி மாணவர்கள் 93 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர்.
இதில், மாணவன் மல்லா தீபக் ஜவஹர்லால் 91.60 சதவீத மதிப்பெண்கள் பெற்று முதல் இடம் பிடித்தார். மாணவன் மிஸ்ரா ஹரேந்திர பிரசாத் 90.60 சதவீத மதிப்பெண் பெற்று 2-வது இடமும், மாணவி ஜென்கம் சோனாலி மனோஜ் 88 சதவீத மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பிடித்தனர். அம்பர்நாத் மேற்கு, டி.எம்.எஸ். பள்ளியில் 96.50 சதவீத மாணவர்கள் தேர்ச்சி அடைந்து உள்ளனர். மாணவி வெர்னிகா ஜேம்ஸ் நாடார் 91.80 சதவீத மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்தார். மாணவன் யாதின் ராஜேஸ் 89.40 சதவீத மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், மாணவி எலவே சங்கீத் சஞ்சய் 89.20 சதவீத மதிப்பெண்கள் பெற்று 3-வது இடமும் பெற்றனர்.
சீத்தாகேம்பில் உள்ள பஸ்லானி ஸ்டார் ஆங்கில உயர்நிலைப்பள்ளி மற்றும் ஜூனியர் கல்லூரி மாணவர்கள் 82.85 சதவீதம் தேர்ச்சி அடைந்தனர். மாணவன் கேத்தன் குமார் கோவிந்த் தாஸ் 84.20 சதவீத மதிப்பெண்கள் எடுத்து முதலிடமும், மிஸ்ரா அனாமிகா 83.40 சதவீத மதிப்பெண்கள் பெற்று 2-வது இடமும், சேக் பர்கீன் அதுலா 81.40 சதவீத மதிப்பெண்கள் எடுத்து மூன்றாம் இடமும் பிடித்தனர்.
95.20 சதவீதம்..
முல்லுண்டு கிழக்கில் உள்ள ஹோலி ஏஞ்சல் உயர்நிலை மற்றும் ஜூனியர் கல்லூரியில் பாம்பிளே கவுரவ் தானாஜி என்ற மாணவன் 95.20 சதவீத மதிப்பெண் பெற்று முதல் இடம் பிடித்தார். மாணவி ராஜஸ்ரீ ரவீந்திரா ஷிங்னே 95 சதவீத மதிப்பெண்கள் பெற்று 2-ம் இடமும், மாணவன் சனாப் சுரில் சுதிர் 93.60 சதவீத மதிப்பெண் பெற்று 3-ம் இடமும் பெற்றனர். அவர்களை பள்ளி நிறுவனர் செல்வி சாமுவேல் மற்றும் பள்ளி முதல்வர் எடிசன் சாமுவேல், ஆசிரியர்கள் பாராட்டினர்.