தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை, பணம் திருட்டு

தனியார் நிறுவன மேலாளர் வீட்டில் நகை, பணம் திருடப்பட்டது.

Update: 2019-06-08 21:05 GMT
பூந்தமல்லி,

போரூரை அடுத்த முகலிவாக்கம், லட்சுமி நகர் மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 49), தி.நகரில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேலாளராக வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை பணி முடிந்து வீட்டுக்கு வந்த பிரகாஷ் வீட்டை பூட்டிவிட்டு அருகில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்று விட்டு இரவு வீட்டிற்கு வந்தார்.

அப்போது அவரது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

நகை- பணம் திருட்டு

இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கொள்ளை நடந்த வீட்டை சோதனை செய்தனர். இதில் வீட்டில் இருந்த 6 பவுன் நகை மற்றும் ரூ.80 ஆயிரத்தை மர்மநபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.

இது குறித்து மாங்காடு போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்