திருப்பூரில் கனமழைக்கு மரங்கள் சாய்ந்ததால் மின்கம்பிகள் சேதம் சீரமைப்பு பணிகள் தீவிரம்
திருப்பூரில் கனமழைக்கு மரங்கள் சாய்ந்ததால் மின்கம்பிகள் சேதமானது. இதனால் பல பகுதிகளில் மின்தடை ஏற்பட்டது. மரங்களை வெட்டி அகற்றி சீரமைப்பு பணிகளில் ஊழியர்கள் நேற்று ஈடுபட்டனர்.
திருப்பூர்,
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் மாலை பரவலாக மழை பெய்தது. திருப்பூர் மாநகரில் பலத்த காற்றுடன் 1 மணி நேரம் கொட்டித்தீர்த்த மழையால் பல இடங்களில் வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. பி.என்.ரோடு, டவுன்ஹால், ராயபுரம், கருவம்பாளையம் உள்பட மாநகரில் பல பகுதிகளில் ரோட்டோரம் நின்ற மரங்கள் வேரோடு சாய்ந்தன. இதனால் மின்கம்பிகள் சேதமடைந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டன. பல இடங்களில் நேற்று முன்தினம் இரவு மின்தடை ஏற்பட்டது. சாய்ந்த மரங்களை மின்வாரிய ஊழியர்கள் நேற்று வெட்டி அப்புறப்படுத்தும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர். பின்னர் மின்கம்பிகளை சீரமைத்து மின்வினியோகம் செய்தனர்.
அதுபோல் மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் நேற்று காலை சாக்கடை கால்வாய்களில் ஏற்பட்ட அடைப்புகளை தூர்வாரி சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்ட னர். பிளாஸ்டிக் கழிவுகள் கால்வாயை அடைப்பதால் தான் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்து விடும் நிலை ஏற்படுகிறது. இதனால் சாக்கடை கால்வாய்களை முறையாக சுத்தம் செய்ய வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
நொய்யல் ஆற்றில் நேற்று முன்தினம் இரவு வெள்ளம் பெருக்கெடுத்து பாய்ந்தது. அணைக்காடு தடுப்பணையில் பிளாஸ்டிக் கழிவுகளுடன் குப்பைகள் அதிக அளவில் தேங்கி கிடந்தது. நொய்யல் ஆற்றில் பிளாஸ்டிக் கழிவுகள் அதிக அளவில் தேங்கியிருந்ததை காண முடிந்தது.
மாநகரில் பல பகுதிகளில் மரக்கிளைகள் முறிந்து கிடந்தன. பல பகுதிகளில் சாக்கடை கால்வாய் நிரம்பி கழிவுகள் ரோட்டில் பாய்ந்தன. திருப்பூர் பெத்தி செட்டிபுரம் பகுதியில் உள்ள தடுப்பணை நொய்யல் ஆற்றில் நுரையுடன் தண்ணீர் பாய்ந்தது. வார்டுகளில் உள்ள வீதிகள் குப்பையாக காட்சியளித்தன. நேற்று காலை துப்புரவு தொழிலாளர்கள் வீதிகளை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். எல்.ஆர்.ஜி. அரசு மகளிர் கல்லூரி வளாகத்தில் அமைக்கப்பட்ட குட்டையில் மழைநீர் தேங்கியது.
திருப்பூர் மாவட்டத்தில் நேற்று காலை 7 மணி வரை பெய்த மழை அளவு விவரம் வருமாறு:-
திருப்பூர் வடக்கு பகுதியில் 55 மில்லி மீட்டரும், அவினாசியில் 18 மில்லி மீட்டரும், பல்லடத்தில் 1 மில்லி மீ்ட்டரும், காங்கேயத்தில் 2 மில்லி மீட்டரும், தாராபுரத்தில் 13 மில்லி மீட்டரும், குண்டடத்தில் 13 மில்லி மீட்டரும், திருமூர்த்தி அணைப்பகுதியில் 3 மில்லி மீட்டரும், அமராவதி அணைப்பகுதியில் 7 மில்லி மீட்டரும், உடுமலையில் 41.40 மில்லி மீட்டரும், மடத்துக்குளத்தில் 14 மில்லிமீட்டரும், திருப்பூர் மாவட்ட கலெக்டர் அலுவலக பகுதியில் 43 மில்லி மீட்டரும், வெள்ளகோவில் பகுதியில் 4 மில்லி மீட்டரும், திருமூர்த்தி அணை நீர்ப்பிடிப்பு பகுதியில் 5 மில்லி மீட்டரும், திருப்பூர் தெற்கு பகுதியில் 50 மில்லி மீட்டரும் என மொத்தம் 269.40 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. சராசரியாக மாவட்டத்தில் 16.83 மில்லி மீட்டர் மழை பதிவானது.