அரசு பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூல்: கண்டக்டருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் நுகர்வோர் கோர்ட்டு உத்தரவு
அரசு பஸ்சில் கூடுதல் கட்டணம் வசூல் செய்தமைக்கு கண்டக்டர் மற்றும் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நுகர்வோர் கோர்ட்டில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
நாமக்கல்,
நாமக்கல்லை சேர்ந்தவர் சுப்பராயன் (வயது 70). இவர் கடந்த ஆண்டு பரமத்திவேலூரில் இருந்து நாமக்கல்லுக்கு அரசு பஸ்சில் பயணம் செய்தார். இந்த பஸ் எல்.எஸ்.எஸ். என கூறி கண்டக்டர் செங்கோடன் ரூ.17 கட்டணம் வசூல் செய்தார். ஆனால் அனைத்து பஸ் நிறுத்தங்களிலும் பஸ்சை நிறுத்தி பயணிகளை இறக்கி கொண்டு வந்தார்.
இதையடுத்து சுப்பராயன் தகவல் அறியும் உரிமை சட்டத்தில் கேள்வி எழுப்பினார். அப்போது அந்த பஸ்சுக்கு எல்.எஸ்.எஸ். உரிமம் வழங்கப்படவில்லை என்பது தெரியவந்தது. இதையடுத்து கூடுதல் கட்டணம் வசூல் செய்தது தொடர்பாக சுப்பராயன், நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செங்கோட்டையன் மற்றும் உறுப்பினர்கள் செல்வி, செல்வநாதன் ஆகியோர் கூடுதல் கட்டணம் வசூல் செய்த கண்டக்டர் செங்கோடன், சேலம் போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் ஆகியோர் கூடுதலாக வசூல் செய்த தொகை ரூ.1-ஐ பயணிக்கு திருப்பி வழங்கவும், சேவை குறைபாட்டிற்கு அபராதமாக ரூ.10 ஆயிரம் நுகர்வோர் சேமநல நிதிக்கு வழங்கவும், வழக்கு செலவாக ரூ.3 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டனர்.
இதேபோல நாமக்கல் கொண்டிசெட்டிப்பட்டியை சேர்ந்தவர் நடராஜன் (45). டிரைவராக பணியாற்றி வருகிறார். இவர் தனது மகன் சுதர்சன் பெயரில் தனியார் வங்கியில் மறு முதலீட்டு திட்டத்தில் ரூ.5 ஆயிரம் முதலீடு செய்து, முதிர்வு தொகையாக ரூ.45 ஆயிரத்து 833 பெறும் வகையில் வங்கி சான்று சீட்டு பெற்று இருந்தார்.
இதற்கிடையே இந்த வங்கி மற்றொரு வங்கியுடன் இணைக்கப்பட்டது. ஆனால் கடந்த 2016-ம் ஆண்டு ஜூன் மாதம் 8-ந் தேதி முதிர்வு தொகையை திருப்பி தர நடராஜன் கோரியபோது, வங்கி சார்பில் சீட்டில் உள்ள தொகையில் பாதியை மட்டுமே தர முடியும் என கூறப்பட்டது.
இது குறித்து நடராஜன் தமிழ்நாடு பயனீட்டாளர் சங்கத்தில் புகார் செய்தார். சங்கம் சார்பில் நாமக்கல் மாவட்ட நுகர்வோர் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் வங்கி அதிகாரிகள் முதிர்வு தொகையான ரூ.45 ஆயிரத்து 833 மற்றும் இழப்பீடாக ரூ.20 ஆயிரம், வழக்கு செலவு தொகையாக ரூ.3 ஆயிரம் வழங்க உத்தரவிடப்பட்டது.