திருவள்ளூர்,
திருவள்ளூர் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த காக்களூர் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு மினி டெம்போவை பறிமுதல் செய்த போலீசார் அதை ஓட்டி வந்த தண்டலம் கிராமத்தை சேர்ந்த சிவா(வயது 29) என்பவரை கைது செய்தனர்.
அதே போல வெள்ளவேடு போலீசார் நேற்று முன்தினம் திருவள்ளூரை அடுத்த புதுச்சத்திரம் கூவம் ஆற்றுப்பகுதியின் அருகே ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மணல் கடத்தி வந்த ஒரு மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்த போலீசார் அதை ஓட்டி வந்த ஜமீன்கொரட்டூரை சேர்ந்த அஜித் (22) என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.
காஞ்சீபுரம் பெரியார்நகர் ஜங்சன் பகுதி வழியாக மணல் கடத்தப்படுவதாக காஞ்சீபுரம் தாலுகா போலீசாருக்கு தகவல் கிடைத்தது. உடனே சப்-இன்ஸ்பெக்டர் ராஜமாணிக்கம் அங்கு விரைந்து சென்றார். அப்போது மணல் கடத்தியது தெரிந்தது. மணல் கடத்தியதாக வாலாஜாபாத் தாலுகா, பஜனை கோவில் தெருவை சேர்ந்த ஷர்மா (32) என்பவரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சீபுரம் அடுத்த மெய்யூர் பாலாற்று பகுதியில் இருசக்கர வாகனங்களில் மணல் கடத்தப்படுவதாக சாலவாக்கம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்-இன்ஸ்பெக்டர் ரோசையன் போலீசாருடன் அங்கு விரைந்து சென்றார்.
அப்போது அந்த பகுதியில் மணல் கடத்தியது தெரியவந்தது. இதையொட்டி மெய்யூர் கிராமத்தை சேர்ந்த ஜோதீஷ் (30), அருண் (27), கோகுல் (21) வசந்தகுமார் (19) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.