வேன் கவிழ்ந்து 6 பேர் படுகாயம்

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் இரூர் கிராமம் காரை பிரிவு ரோடு அருகில் சென்றுகொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது.

Update: 2019-06-05 22:30 GMT
பாடாலூர்,

திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து 20-க்கும் மேற்பட்டவர்கள் ஒரு வேனில் நேற்று காலை கடலூர் மாவட்டம், பெண்ணாடம் நோக்கி சென்று கொண்டு இருந்தனர். திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் வட்டம் இரூர் கிராமம் காரை பிரிவு ரோடு அருகில் சென்றுகொண்டு இருந்தபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலையோரம் கவிழ்ந்தது. இதில் வேனில் பயணம் செய்த கவிதா(வயது 39), வெண்ணிலா(48), மகேஸ்வரி(65) உள்பட 6 பேர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த பாடாலூர் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். 

மேலும் செய்திகள்