வானவில் : பயணத்துக்கு உதவும் ‘ஆஸ்ட்ரிச் பில்லோ’
இந்த தலையணை வெளியூர் பயணங்கள் அடிக்கடி மேற்கொள்வோருக்கு மிகவும் உபயோகமானது.
பொதுவாக பாலைவனத்தில் எதிரிகளைப் பார்த்தால் தலையை மண்ணுக்குள் புதைத்துக் கொள்ளும் பழக்கம் கொண்டது நெருப்புக் கோழி (ஆஸ்ட்ரிச்). உங்கள் முகத்தை முழுவதுமாக மூடும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த தலையணைக்கு அந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இது மிகவும் மிருதுவான, நெளியும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. கண், காது ஆகியவை நன்கு மூடியுள்ளதால் இதைப் போட்டுக் கொண்டால் நிம்மதியான உறக்கம் நிச்சயம். இதைப் போட்டு தூங்கினால் புத்துணர்ச்சி கிடைக்கும்.
எந்த இடத்திலும், எத்தகைய சூழலிலும் இதை அணிந்து கொண்டு தூங்க முடியும். குட்டித் தூக்கம் போட நினைப்பவர்கள் கூட இதை அணிந்து கொண்டு தூங்கி புத்துணர்ச்சி பெறலாம். இதன் விலை ரூ.2,400.