வானவில் : சோலார் போர்டபிள் விளக்கு
வெளியூருக்கு செல்லும் போதெல்லாம் அவசர தேவைக்கு டார்ச் லைட் போன்றவற்றை எடுத்துச் செல்வது அவசியமாகும்.
ஆனால் இவற்றுடன் பேட்டரி உள்ளிட்டவற்றையும் எடுத்துச் செல்வதைத் தவிர்க்கும் வகையில் சூரிய ஆற்றலில் இயங்கும் விளக்குகள் இப்போது விற்பனைக்கு வந்துள்ளன. அந்த வகையில் பயோலைட் நிறுவனம் சுற்றுப் பயணம் செய்யும்போது எடுத்துச் செல்லும் வகையில் போர்டபிள் விளக்கை அறிமுகம் செய்துள்ளது. ஒருங்கிணைந்த சோலார் பேனலைக் கொண்டதாக இது வந்துள்ளது. அதாவது விளக்கு ஒருபுறமும், மறுபக்கத்தில் சோலார் பேனலும் உள்ளன.
இதனால் இந்த விளக்கின் மீது சூரிய ஒளி படும்படி இருந்தாலே போதும். சூரிய ஒளியில் 7 மணி நேரத்தில் இதில் உள்ள பேட்டரி முழுமையாக சார்ஜ் ஆகிவிடும். இந்த விளக்கில் வெளிச்சம், கொண்டாட்டங்களுக்கான பலவித ஒளி என தனித்தனியாக வெளிச்சத்தைப் பெற முடியும். சூரிய ஒளி இல்லாத பகுதியில் யு.எஸ்.பி. சாக்கெட் மூலம் சார்ஜ் செய்தால் 2 மணி நேரத்தில் இது முழுவதுமாக சார்ஜ் ஆகிவிடும்.
இது தொடர்ந்து 50 மணி நேரம் எரியும். இதன் விலை சுமார் ரூ.1,600.