வானவில் : செவிலியர்களுக்கு உதவும் தானியங்கி சக்கர நாற்காலி

மருத்துவமனைகளில் நோயாளிகளை சக்கர நாற்காலிகளில் அமர வைத்து நீண்ட தூரம் நடப்பது மருத்துவமனை ஊழியர்களுக்கும் செவிலியர்களுக்கும் மிகுந்த சிரமமாக இருப்பதை அறிந்த சிங்கப்பூர் நிறுவனம் ஒன்று தானியங்கி சக்கர நாற்காலிகளை உருவாகியுள்ளது.

Update: 2019-06-05 12:55 GMT
 சிங்கப்பூரின் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்துடன் எம்.ஐ.டி. விஞ்ஞானிகள் குழுவும் இணைந்து ஸ்மார்ட் என்னும் உலகின் முதல் தானியங்கி சக்கர நாற்காலிகளை தயாரித்துள்ளது. நோயாளி இதில் ஏறி அமர்ந்ததும் தானாகவே இந்த நாற்காலி நகர்ந்து அவரது அறைக்கு கூட்டி செல்கிறது. இந்த நாற்காலியில் பொருத்தப்பட்டுள்ள கணினியில் இருக்கும் கட்டளைகளுக்கு ஏற்ப இது செயல்படுகிறது குறுகலான பாதைகளிலும் நோயாளியை இடித்து விடாமல் செல்கிறது இந்த நாற்காலி.

எதிரே ஏதேனும் தடைகள் தென்பட்டால் சட்டென்று நிறுத்தி விடுகிறது. இதற்கு ஆறு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன. அதனால் நோயாளிகள் கீழே விழுந்து விடுவோமோ என்கிற பயமின்றி பாதுகாப்பாக அமரலாம். சிங்கப்பூரில் இருக்கும் சங்கி மருத்துவமனையில் இது சோதனை செய்யப்பட்டு பாராட்டுகளையும் பெற்றது.

இனி செவிலியர்கள் நாற்காலி தள்ளுவதில் அதிக நேரம் கழிக்காமல் நோயாளிகளுக்கு தேவையான பணிகளை செய்வதில் தங்கள் நேரத்தை பயனுற செலவழிக்கலாம் என்று தெரிவிக்கின்றனர் இந்நிறுவனத்தினர்.

மேலும் செய்திகள்