போலீஸ்காரர் மர்மமாக இறந்த திருச்சி போதை மறுவாழ்வு மையத்தில் மருத்துவக் குழுவினர் நேரில் ஆய்வு
போலீஸ்காரர் மர்மமாக இறந்த திருச்சி போதை மறுவாழ்வு மையத்தில், மருத்துவ குழுவினர் நேரில் சென்று நேற்று ஆய்வு நடத்தினர். அப்போது அந்த மையம் அரசின் அனுமதியின்றி இயங்கியது கண்டறியப்பட்டது.
திருச்சி,
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்த மணிவண்ணன் என்பவர், திருச்சி கே.கே.நகர் அன்பழகன் தெருவில், ‘லைப் அண்ட் கேர் சென்டர்’ என்ற பெயரில் போதை மறுவாழ்வு மையம் நடத்தி வருகிறார். மது போதைக்கு அடிமையானவர்களுக்கு, இந்த மையத்தில் உரிய சிகிச்சை அளித்து அவர்களை நல்வழிப்படுத்துவதாக கூறப்பட்டது. தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் இருந்து வந்து 25 பேர் இந்த மையத்தில் சிகிச்சை பெற்று வந்தனர்.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலை அடுத்த கண்டமங்கலத்தை சேர்ந்த போலீஸ்காரர் தமிழ்ச்செல்வன் (வயது 34) என்பவர், மது போதைக்கு அடிமையானதால், அவரால் பணிக்கு சரிவர செல்லமுடியவில்லை. இதனால், பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
போதை பழக்கத்தை மறந்து மீண்டும் பணியில் சேர முடிவு செய்த தமிழ்ச்செல்வன், நண்பர்கள் மூலம் திருச்சி கே.கே.நகரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்தில் சில நாட்களுக்கு முன்பு சேர்ந்தார். அங்கு சிகிச்சை பெற்று வந்த தமிழ்ச்செல்வன் கடந்த 1-ந் தேதி இறந்து விட்டதாக காட்டுமன்னார் கோவிலில் உள்ள பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு மையத்தில் இருந்து தகவல் தெரிவிக்கப்பட்டது. அதாவது, சிகிச்சைக்காக மாத்திரைகள் கொடுக்கப்பட்டபோது மூச்சுத்திணறல் ஏற்பட்டது என்றும், உடனடியாக தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு அனுமதித்தும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக கூறப்பட்டது.
உடனடியாக உறவினர்கள், அவரது உடலை பெற்றுச்சென்று சொந்த ஊரில் அடக்கம் செய்தனர். அடக்கம் செய்யும் முன்பு அவரது உடலில் காயங்கள் இருப்பதை கண்டு உறவினர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டது. ஆனாலும், அதை பெரிதாக எடுத்து கொள்ளாமல் விட்டு விட்டனர்.
நேற்று முன்தினம் தமிழ்ச்செல்வனின் உடைமைகளை எடுத்து செல்வதற்காக திருச்சி போதை மறுவாழ்வு மையத்திற்கு உறவினர்கள் சிலர் வந்தனர். அப்போது மையத்தில் சிகிச்சை பெற்ற ஒருவர், தமிழ்ச்செல்வனை அடித்து கொன்று விட்டதாக கூறியுள்ளார். அதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்தனர். அதனால்தான், தமிழ்ச்செல்வன் உடலில் காயங்கள் இருந்ததா? என சந்தேகத்திற்கு விடை கிடைத்ததுபோல உறவினர்கள் உணர்ந்தனர்.
உடனடியாக திருச்சி கே.கே.நகரில் போலீசில் உறவினர்கள் புகார் கொடுத்தனர். தமிழ்ச்செல்வன் சாவில் சந்தேகம் இருப்பதாக அதில் கூறப்பட்டிருந்தது. போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கினர். போலீஸ் உதவி கமிஷனர் பாலமுருகன் தலைமையிலான போலீசார் போதை மறுவாழ்வு மையத்திற்கு சென்றனர். அங்கு சிலர் கை, கால்களில் சங்கிலியால் கட்டப்பட்டு கிடந்தனர். அவர்கள் மீட்கப்பட்டு சங்கிலிகள், கயிறுகள் அகற்றப்பட்டன.
அந்த மையத்தில் இருந்தவர்கள் உடனடியாக வேறு மையத்திற்கு மாற்றப்பட்டனர். அங்கிருந்த ஊழியர்கள், நோயாளிகளாக அனுமதிக்கப்பட்டவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். தமிழ்ச்செல்வனுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விவரங்களையும் போலீசார் சேகரித்தனர்.
இதற்கிடையே போதை மறுவாழ்வு மையத்தை ஆய்வு செய்திட டாக்டர் நிரஞ்சனா தலைமையிலான மருத்துவ குழுவினருக்கு சென்னை அரசு மனநல காப்பக இயக்குனர் அலுவலகம் உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து நேற்று டாக்டர் நிரஞ்சனா தலைமையிலான குழுவினர் திருச்சி கே.கே.நகரில் உள்ள போதை மறுவாழ்வு மையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
அப்போது, அந்த மையம் அரசின் அனுமதி பெறாமல் நடத்தப்பட்டது கண்டறியப்பட்டது. மேலும் மையத்தில் உள்ள பதிவேடுகள், நோயாளிகள் விவரம் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் மருத்துவ குழு ஆய்வு செய்தது. கடந்த 2 ஆண்டுகளாக மையம் செயல்பட்டு வருவதாக கூறப்பட்டது. ஆனால், அதற்கான ஆவணங்கள், அரசிடம் அனுமதி பெற்றதற்கான கடிதம் என எதுவும் இல்லை எனவும் டாக்டர் நிரஞ்சனா தெரிவித்தார்.