மணப்பாறை அருகே கிணற்றில் விழுந்த கோழியை மீட்க முயன்ற ராணுவ வீரர் பலி
மணப்பாறை அருகே கிணற்றில் விழுந்த கோழியை மீட்க முயன்ற ராணுவ வீரர் கிணற்றில் தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார்.
மணப்பாறை,
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்தவர் ஜான்பீட்டர்(வயது 35). இவர் பஞ்சாப் மாநிலம், பதன்கோட் பகுதியில் ராணுவ வீரராக பணியாற்றி வந்தார். இவர் ஒரு மாத விடுமுறைக்காக கடந்த 10 நாட்களுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்திருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை அவருடைய வீட்டின் முன்பு சுமார் 70 அடி ஆழமுள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில், கோழி தவறி விழுந்தது. அதை மீட்பதற்காக ஜான்பீட்டர் உடலில் கயிறு கட்டிக்கொண்டு கிணற்றில் இறங்கினார். அவர் கோழியை பிடித்து ஒரு சாக்கில் கட்டி கயிறு மூலம் மேலே கொண்டு வரும் வகையில் வைத்து விட்டு, கயிற்றை பிடித்துக்கொண்டு மேலே ஏறி வந்தார். அப்போது திடீரென அவர் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். இதில் அவர் படுகாயமடைந்தார்.
இதனால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் மற்றும் அக்கம், பக்கத்தினர் விரைந்து வந்து ஜான் பீட்டரை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். மேலும் 108 ஆம்புலன்ஸ் பணியாளர்கள் மற்றும் ஊர்க்காவல் படையைச் சேர்ந்த பத்மநாதன் ஆகியோரும் அங்கு வந்து, கிணற்றில் இறங்கி, ஜான்பீட்டரை மீட்டு ஸ்டெச்சர் மூலம் கடும் போராட்டத்திற்கு பின்னர் மேலே கொண்டு வந்தனர். அப்போது ஜான்பீட்டர் மயங்கிய நிலையில் இருந்தார். உடனடியாக அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் மணப்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதையடுத்து அவருடைய உடல் பிரேத பரிசோதனை அறையில் வைக்கப்பட்டது. கோழியை மீட்க கிணற்றில் இறங்கிய ராணுவ வீரருக்கு ஏற்பட்ட துயர முடிவை அறிந்த கிராம மக்கள் சோகமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மணப்பாறை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.