மின்னல் தாக்கி அக்காள்-தம்பி பலி மழைக்கு தகரக்கொட்டகையில் ஒதுங்கியபோது பரிதாபம்
துறையூர் அருகே மழையில் நனையாமல் இருக்க தகரக்கொட்டகையில் ஒதுங்கிய அக்காள்-தம்பி மின்னல் தாக்கி பரிதாபமாக இறந்தனர்.
திருச்சி,
திருச்சி மாவட்டம் துறையூரை அடுத்த மருவத்தூர் அம்மம்பாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ். கூலி தொழிலாளி. இவருக்கும், பெரம்பலூர் மாவட்டம் எதுமலைபுதூரை சேர்ந்த லெட்சுமணன் மகள் முத்துலட்சுமிக்கும் (வயது 20) கடந்த ஓராண்டுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இதையடுத்து அம்மம்பாளையத்தில் உள்ள வீட்டில் முத்துலட்சுமி கணவருடன் வசித்து வந்தார்.
முத்துலட்சுமியின் தம்பி குணா (18). இவர், பிளஸ்-2 முடித்துவிட்டு ஒரு தனியார் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் தொடங்கப்படாத நிலையில், குணா அம்மம்பாளையத்தில் உள்ள முத்துலட்சுமி வீட்டிற்கு வந்து தங்கியிருந்தார்.
முத்துலட்சுமி தினமும் காலையில் எழுந்து வீட்டில் உள்ள பசு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வது வழக்கம். அதுபோல் நேற்று காலை முத்துலட்சுமியும், அவருடைய தம்பி குணாவும் மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச்சென்றார்கள். வயலில் மாடுகள் மேய்ந்ததை தொடர்ந்து, முத்துலட்சுமியும், குணாவும் அங்கேயே இருந்து மாடுகளை கண்காணித்தனர்.
இந்நிலையில் மாலை சுமார் 4 மணிக்கு மேல் திடீரென்று இடி, மின்னல், பலத்த காற்றுடன் மழை பெய்ய தொடங்கியது. இதனால் மழையில் நனையாமல் இருக்க முத்துலட்சுமியும், குணாவும் அருகே உள்ள தகரக் கொட்டகையில் ஒதுங்கினர். அங்கு செல்போனில் பாட்டு கேட்டபடி அவர்கள் நின்று கொண்டு இருந்தனர்.
அப்போது திடீரென்று அப்பகுதியில் மின்னல் தாக்கியது. அந்த அதிர்ச்சியில் முத்துலட்சுமியும், குணாவும் மயங்கி விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்கள். சத்தம் கேட்டு, மேய்ந்து கொண்டிருந்த மாடுகள் அங்கிருந்து ஓடின. இதனால் அந்த மாடுகள் உயிர் தப்பின.
மேலும் அக்கம், பக்கத்தில் ஆடு, மாடுகள் மேய்த்து கொண்டிருந்தவர்கள் அங்கு ஓடி வந்து பார்த்தனர். அப்போது அக்காள்-தம்பி இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், 2 பேரின் உடல்களையும் துறையூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். இந்த சம்பவம் குறித்து துறையூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மின்னல் தாக்கி அக்காள், தம்பி உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.