தண்டவாள பராமரிப்பு பணிக்காக மதுரை கோட்ட பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் போக்குவரத்தில் மாற்றம்; வருகிற 30-ந் தேதி வரை அமலில் இருக்கும்

தண்டவாள பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் மதுரை கோட்ட பாசஞ்சர், எக்ஸ்பிரஸ் ரெயில்கள் போக்குவரத்தில் வருகிற 30-ந் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Update: 2019-06-03 23:18 GMT
மதுரை,

மதுரை ரெயில்வே கோட்டத்தில் நடந்து வரும் தண்டவாள பராமரிப்பு பணிக்காக, விருதுநகர்-வாஞ்சிமணியாச்சி, மதுரை-திண்டுக்கல், திருச்சி-காரைக்குடி, மதுரை-வாஞ்சிமணியாச்சி, நெல்லை ஆகிய ரெயில் பாதைகளில் இயக்கப்படும் பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ள ரெயில்கள் விவரம் வருமாறு:-

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16340) வருகிற 30-ந் தேதி வரை திங்கள், செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் திண்டுக்கல் ரெயில் நிலையத்தில் இருந்து ½ மணி நேரம் தாமதமாக புறப்படும். தாதர்-நெல்லை(வ.எண்.11021) வாரம் மும்முறை ரெயில் நெல்லை ரெயில் நிலையத்திலிருந்து வருகிற 11-ந் தேதி வரை மதியம் 12.05 மணிக்கு அதாவது 20 நிமிடங்கள் தாமதமாக புறப்படும்.

சென்னை-தூத்துக்குடி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.06053) வருகிற 11-ந் தேதி வரை செவ்வாய்க்கிழமைகளில் ½ மணி நேரம் தாமதமாக தூத்துக்குடி ரெயில் நிலையம் சென்றடையும்.

மைசூர்-தூத்துக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் (வ.எண்.16236) வருகிற 11-ந் தேதி வரை 20 நிமிடங்கள் தாமதமாக தூத்துக்குடி சென்றடையும். மேலும் இந்த ரெயில் தூத்துக்குடி-நெல்லை பாசஞ்சர் ரெயிலுக்கு (வ.எண்.56767) மணியாச்சி ரெயில் நிலையத்தில் இருந்து வருகிற 11-ந் தேதி வரை புதன்கிழமை மற்றும் சனிக்கிழமை தவிர பிற நாட்களில் இணைப்பு ரெயிலாக இயக்கப்படாது.

பாலக்காடு-திருச்செந்தூர் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56769) வருகிற 30-ந் தேதி வரை திங்கட்கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் திண்டுக்கல்-நெல்லை ரெயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் மதுரை-நெல்லை ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

மறுமார்க்கத்தில் திருச்செந்தூர்-பாலக்காடு பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56770) வருகிற 30-ந் தேதி வரை திங்கட் கிழமை, புதன்கிழமை, வியாழக்கிழமை, சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் நெல்லை-திண்டுக்கல் ரெயில் நிலையங்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் நெல்லை-மதுரை ரெயில் நிலையங்களுக்கு இடையே பகுதியாக ரத்து செய்யப்படும்.

மதுரை-பழனி பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56710) வருகிற 30-ந் தேதி வரை புதன்கிழமை தவிர பிற நாட்களில் மதுரை ரெயில் நிலையத்திலிருந்து காலை 7.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக காலை 7.15 மணிக்கு புறப்படும்.

நெல்லை-ஈரோடு பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56826) வருகிற 30-ந் தேதி வரை புதன்கிழமை தவிர பிறநாட்களில் திண்டுக்கல் ரெயில் நிலையத்திலிருந்து சுமார் 2 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

நெல்லை-மயிலாடுதுறை பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56822/56821) வருகிற 30-ந் தேதி வரை திண்டுக்கல்-திருச்சி ரெயில் நிலையங்களுக்கு இடையே இரு மார்க்கங்களிலும் புதன் கிழமை தவிர பிறநாட்களில் ரத்து செய்யப்படுகிறது.

நாகர்கோவில்-மும்பை எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16352) வருகிற 30-ந் தேதி வரை ஞாயிறு மற்றும் வியாழக்கிழமைகளில் திருச்சி ரெயில் நிலையத்திற்கு 20 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும்.

மதுரை-பிகானீர் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.22631) வருகிற 30-ந் தேதி வரை வியாழக்கிழமைகளில் திருச்சி ரெயில் நிலையத்திற்கு 20 நிமிடங்கள் காலதாமதமாக சென்று சேரும்.

சென்னை-குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16127) வருகிற 30-ந் தேதி வரை வியாழக்கிழமை தவிர பிறநாட்களில் திண்டுக்கல் மற்றும் அம்பாத்துரை ரெயில் நிலையங்களுக்கிடையே சுமார் ½ மணி நேரம் நிறுத்திவைக்கப்படும். இந்த ரெயில் 1½ மணி நேரம் தாமதமாக திருவனந்தபுரம் ரெயில் நிலையம் சென்றடையும்.

சென்னை-தூத்துக்குடி இணைப்பு ரெயில்(வ.எண்.16129) வருகிற 30-ந் தேதி வரை வியாழக்கிழமை தவிர பிறநாட்களில் சுமார் 1 மணி நேரம் தாமதமாக தூத்துக்குடி ரெயில்நிலையம் சென்றடையும்.

மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56735) வருகிற 30-ந் தேதி வரை வியாழக்கிழமை தவிர பிறநாட்களில் ½ மணி நேரம் தாமதமாக செங்கோட்டை ரெயில்நிலையம் சென்றடையும்.

நாகர்கோவில்-கோவை பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56319) வருகிற 30-ந் தேதி வரை வியாழக்கிழமை தவிர பிறநாட்களில் மதுரை-திண்டுக்கல் இடையே ரத்து செய்யப்படும்.

மறுமார்க்கத்தில், கோவை-நாகர்கோவில் பாசஞ்சர் ரெயில் (வ.எண்.56320) வருகிற 30-ந் தேதி வரை வியாழக்கிழமை தவிர பிறநாட்களில் திண்டுக்கல்-மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

திருவனந்தபுரம்-திருச்சி இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.22628) வருகிற 18-ந் தேதி மற்றும் 19-ந் தேதி ஆகிய நாட்களில் திருவனந்தபுரத்திலிருந்து காலை 11.45 மணிக்கு புறப்படுவதற்கு பதிலாக 1 மணி நேரம் தாமதமாக மதியம் 12.45 மணிக்கு புறப்படும். இதையடுத்து இந்த ரெயில் திருச்சி ரெயில் நிலையத்துக்கு சுமார் 2 மணி நேரம் தாமதமாக சென்றடையும்.

திருச்சி-ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56831) வருகிற 29-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர பிறநாட்களில் மானாமதுரை-ராமேசுவரம் இடையே ரத்து செய்யப்படுகிறது.

மறுமார்க்கத்தில், ராமேசுவரம்-திருச்சி பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56830) வருகிற 29-ந் தேதி வரை ஞாயிற்றுக்கிழமை தவிர பிறநாட்களில் ராமேசுவரம்-மானாமதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

பாசஞ்சர் மற்றும் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் இந்த போக்குவரத்து மாற்றத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

மேலும் செய்திகள்