ஏலச்சீட்டு நடத்தி ரூ.6¼ லட்சம் மோசடி செய்தவர் கைது

ஏலச்சீட்டு நடத்தி ரூ.6¼ லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன ஊழியரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2019-06-03 21:25 GMT
ஆவடி,

ஆவடியை அடுத்த அயப்பாக்கம் அய்யப்பன் நகரை சேர்ந்தவர் முத்துகிருஷ்ணன் (வயது 54). தனியார் கம்பெனி ஊழியரான இவர், ஏலச்சீட்டு நடத்தி வந்தார். இவரிடம், திருமுல்லைவாயலை அடுத்த தென்றல் நகர் திருவள்ளுவர் தெருவை சேர்ந்த நந்தகுமார் (72), அதே பகுதியை சேர்ந்த ஞானவேல் (40) உள்பட ஏராளமானவர்கள் ரூ.1 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரை சீட்டு கட்டி வந்தனர்.

இந்தநிலையில் நந்தகுமார் ஏலச்சீட்டு முடிந்த நிலையில் அவருக்கு தரவேண்டிய ரூ.3 லட்சத்து 70 ஆயிரத்தை முத்துகிருஷ்ணன் கொடுக்காமல் காலம் கடத்தி வந்தார். அதேபோல் ஞானவேலுக்கு ரூ.2 லட்சத்து 59 ஆயிரத்தையும் கொடுக்காமல் ஏமாற்றியதாக தெரிகிறது.

ரூ.6 லட்சம் மோசடி

இதற்கிடையில் ஏலச்சீட்டு பணத்தை திருப்பி கொடுக்காமல் மோசடி செய்த முத்துகிருஷ்ணன், திடீரென தனது வீட்டை பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த நந்தகுமார், ஞானவேல் இருவரும் திருமுல்லைவாயல் போலீசில் புகார் செய்தனர்.

அதனபேரில் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் புருஷோத்தமன் வழக்குப்பதிவு செய்து நேற்று காலை முத்துகிருஷ்ணனை கைது செய்து விசாரித்தார். அதில் அவர் ஏலச்சீட்டு நடத்தி நந்தகுமார் மற்றும் ஞானவேல் இருவரிடமும் ரூ.6 லட்சத்து 29 ஆயிரத்தை மோசடி செய்தது தெரிந்தது. பின்னர் கைதான முத்துகிருஷ்ணனை அம்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்