கடலூர் மாவட்டத்தில் 5 நகராட்சிகளில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகள் விவரம்

கடலூர் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகளில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகள் விவரம் தெரியவந்துள்ளது.

Update: 2019-06-03 23:15 GMT
கடலூர், 

உள்ளாட்சி தேர்தலுக்கான ஆயத்தபணிகளை மாநில தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தலுக்கான வாக்காளர் பட்டியல் அடுத்த மாதம்(ஜூலை) 2-வது வாரத்திலும், தேர்தல் தேதி அடுத்த ஆகஸ்டு மாத இறுதியிலும் வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இதற்கிடையே உள்ளாட்சி தேர்தல் தொடர்பான இட ஒதுக்கீடு பட்டியலை தமிழக அரசு வெளியிட்டு அரசாணை பிறப்பித்துள்ளது. அதன்படி கடலூர் மாவட்டத்தில் கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய 5 நகராட்சிகளில் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள வார்டுகள் விவரம் தெரியவந்துள்ளது.

கடலூர் பெரு நகராட்சியில் மொத்தம் 45 வார்டுகள் உள்ளன. இதில் 28, 33, 34 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பொது பிரிவினருக்கும், 4, 25, 36 வார்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும், 1, 2, 5, 6, 7, 8, 15, 17, 18, 19, 20, 21, 22, 26, 30, 31, 38, 42, 44, 45 ஆகிய வார்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

அதேபோல் நெல்லிக்குப்பம் நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இதில் 6, 7, 12, 25, 28 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பொது பிரிவினருக்கும், 2, 4, 15, 24, 26, 27 வார்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும், 9, 10, 16, 17, 20, 21, 22, 23, 30 ஆகிய வார்டுகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.

பண்ருட்டி நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 9, 11 வார்டுகள் எஸ்.சி. பொது பிரிவினருக்கும், 6, 7, 10 எஸ்.சி. பெண்களுக்கும், 4, 12, 13, 14, 15, 17, 18, 19, 22, 23, 25, 28, 29, 31 ஆகிய வார்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

சிதம்பரம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 1-வது வார்டு எஸ்.சி. பொது பிரிவினருக்கும், 4-வது வார்டு எஸ்.சி. பெண்களுக்கும், 3, 5, 6, 8, 10, 15, 18, 19, 21, 22, 24, 28, 29, 30, 31, 32 ஆகிய வார்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

விருத்தாசலம் நகராட்சியில் மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. இதில் 1, 18, 30 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பொது பிரிவினருக்கும், 22, 26, 33 ஆகிய வார்டுகள் எஸ்.சி. பெண்களுக்கும், 6, 8, 9, 10, 11, 14, 16, 20, 24, 25, 28, 29, 31, 32 ஆகிய வார்டுகள் பெண்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.

மேலும் செய்திகள்