சீர்வரிசையுடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி வைத்த பெற்றோர்
தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் கோடை விடுமுறைக்கு பின் நேற்று திறக்கப்பட்ட பள்ளிக்கூடத்துக்கு சீர்வரிசையுடன் குழந்தைகளை பெற்றோர் அனுப்பி வைத்தனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி பண்டாரம்பட்டியில் டி.என்.டி.டி.ஏ தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளிக்கூடத்தில் சுமார் 50 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கூடம் நேற்று மீண்டும் திறக்கப்பட்டது. அப்போது, ஊர் பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு சீர் வரிசையுடன் அழைத்து வந்தனர்.
அப்போது பள்ளிக்கூடத்துக்கு தேவையான 10 நாற்காலிகள், புத்தகம் அடுக்கி வைப்பதற்கான ரேக், தண்ணீர் தொட்டி, பில்டர் மற்றும் விளையாட்டு பொருட்கள் ஆகியவற்றை சீர்வரிசையாக மக்கள் எடுத்து சென்றனர். அவர்கள் ஊரின் முக்கிய வீதி வழியாக ஊர்வலமாக சென்று பள்ளிக்கூடத்தில் தங்கள் குழந்தைகளை விட்டனர்.
தொடர்ந்து சீர்வரிசையாக கொண்டு சென்ற பொருட்களை பள்ளிக்கூட தாளாளர் லூர்துராஜ் ஜெயசிங்கிடம் பொதுமக்கள் வழங்கினர். இந்த நிகழ்ச்சியில் பள்ளிக்கூட தலைமை ஆசிரியர் நெல்சன் பொன்ராஜ் வரவேற்று பேசினார். பெற்றோர்- ஆசிரியர் கழக தலைவர் திரவியராஜ், முன்னாள் மாணவர் சங்க பொருளாளர் தனலட்சுமி ஆகியோர் பள்ளிக்கூட தாளாளருக்கு நினைவுப்பரிசு வழங்கினர். தொடர்ந்து இந்த கல்வியாண்டுக்கான புத்தகத்தை பள்ளிக்கூட தாளாளர் மாணவர்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பெற்றோர் திரளாக கலந்து கொண்டனர். ஆசிரியை பெல்சிபாய் நன்றி கூறினார்.