நோய் தாக்கத்தால் வெற்றிலை சாகுபடி பாதிப்பு விவசாயிகள் கவலை
செவட்டல் நோய் தாக்கத்தால் வெற்றிலை சாகுபடி பாதிக்கப்பட்டது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
லாலாபேட்டை,
கரூர் மாவட்டம், லாலாபேட்டை, கள்ளபள்ளி, கருப்பத்தூர், திருக்காம்புலியூர் மற்றும் பல்வேறு பகுதிகளில் விவசாயிகள் பல ஆயிரம் ஏக்கரில் வெற்றிலை கொடிக்கால் சாகுபடி செய்துள்ளனர். இந்த வெற்றிலைகளை மாயவரம், திருச்சி, வேலூர், திருவண்ணாமலை, மேட்டுபாளையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு விற்பனைக்காக அனுப்புகின்றனர். 10,000 வெற்றிலை கொண்ட ஒரு சுமை ரூ.5 ஆயிரத்திற்கு விற்பனை ஆகி உள்ளது. தற்போது போதிய மழையில்லாமல் வெற்றிலையில் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் செவட்டல் என்ற நோய் தாக்கப்பட்டு வெற்றிலை பழுத்து காய்ந்து பாதிப்பு ஏற்பட்டது. இதனால் ரூ.5 ஆயிரத்திற்கு விற்ற வெற்றிலை, தற்போது ரூ.3500-க்கு விற்பனை ஆகி கொண்டு உள்ளது.
இதுகுறித்து லாலாபேட்டையை சேர்ந்த விவசாயி முருகேசன் கூறுகையில், வெற்றிலை உற்பத்தி செய்வதற்கு கிடங்கு வெட்டுதல், உரம், குப்பை, மருந்து மற்றும் கூலி ஆட்கள் கொண்ட செலவுடன் ஒரு ஏக்கருக்கு ரூ.2 லட்சம் செலவாகிறது. திடீரென்று இந்த நோய் தாக்கப்பட்டதால் வெற்றிலை சாகுபடி பாதிக்கப் பட்டுள்ளது. எனவே நோய் தாக்கப்பட்ட பகுதிகளில் அதிகாரிகள் நேரில் சென்று பாதிப்பை கண்டறிந்து விவசாயிகளுக்கு நஷ்ட ஈடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.