சாந்தாம்பாறை பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்
சாந்தாம்பாறை பகுதியில் குடிநீர் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாந்தாம்பாறை,
இடுக்கி மாவட்டம் சாந்தாம்பாறை பஞ்சாயத்துக்கு உட்பட்ட பூப்பாறை எஸ்டேட் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். அவர்களுக்கு சாந்தாம்பாறை பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் குழாய்கள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதி மக்களுக்கு முறையாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரிகிறது.
இதனால் பல கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று குடிநீர் எடுத்து வரும் நிலைக்கு அப்பகுதி மக்கள் தள்ளப்பட்டுள்ளனர். மேலும் சிலர் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வந்தனர். குடிநீர் பிரச்சினை குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் நேற்றுமுன்தினம் குடிநீர் கேட்டு ராஜகுமாரி-பூப்பாறை சாலையில் அமர்ந்து மறியல் போராட்டம் நடத்தினர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக் கப்பட்டது. சம்பவம் குறித்து தகவல் அறிந்த சாந்தாம்பாறை போலீசார் விரைந்து சென்று பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது முறையாக குடிநீர் வினியோகம் செய்ய சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பரிந்துரை செய்வதாக உறுதி அளித்தனர். இதில் சமாதானம் அடைந்த பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.