திருவள்ளூர் மாவட்டத்தில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை மரங்கள் முறிந்தன

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை பெய்ததில் மரங்கள் முறிந்து சாலையில் விழுந்தன.

Update: 2019-06-02 22:30 GMT
சென்னை,

திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியில் கடந்த ஒரு மாதமாக வெயில் வாட்டி வதைத்தது. நேற்று முன்தினம் சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. நேற்று காலை வெயில் வாட்டி எடுத் தது. மாலை 4 மணியளவில் திடீரென்று மேகமூட்டம் ஏற்பட்டு சூறாவளி காற்றுடன் பலத்த மழை பெய்தது. சற்று நேரத்தில் ஆலங்கட்டி மழையாக மாறியது.

இதில் பல வீடுகளின் தகர மேற்கூரைகள் பறந்தன. பள்ளிப்பட்டு கொசஸ்தலை ஆற்றங்கரையில் இடுகாட்டிற்கு எதிரே தேசுரெட்டி, முனி ஆகியோரது வீடுகளின் தகர மேற்கூரைகள் காற்றில் பறந்தன.

அந்த பகுதியில் பேரூராட்சி சார்பில் அமைக்கப்பட்டு இருந்த திடக்கழிவு மேலாண்மை உரக்கிடங்கின் மேற்கூரை இரும்பு தகடுகள் காற்றில் அடித்து செல்லப்பட்டன. சாலையோரம் இருந்த மரம் காற்றில் முறிந்து விழுந்தது. பள்ளிப்பட்டு-சித்தூர் சாலையில் அம்மன் கோவில் அருகே நின்ற மரம் முறிந்து பிரதான சாலையில் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதில் 10-க்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதம் அடைந்தன. இதனால் மின் இணைப்பு துண்டிக்கப்பட் டது.

மேலும் செய்திகள்