பாதுகாப்பு துறை செயலாளருக்கு துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள் தபால் அனுப்பும் போராட்டம்
திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள், பாதுகாப்பு துறை செயலாளருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பொன்மலைப்பட்டி,
இந்தியா முழுவதும் 41 படைக்கலன் தொழிற்சாலைகள் உள்ளன. இந்த தொழிற்சாலைகள் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வருகின்றன. இங்கு தயாரிக்கப்படும் ஆயுதங்கள் ராணுவம், மத்திய ரிசர்வ் போலீசார் உள்ளிட்ட பாதுகாப்பு துறைக்கு பயன்படுத்தப்படுகிறது. இதில் ராணுவத்திற்கு வழங்கப்படும் ஆயுதங்கள் தரம் இல்லாமல் இருப்பதாக ராணுவ அதிகாரிகள் கூறுவதாக, சமீபத்தில் ஒரு ஆங்கில நாளிதழில் செய்தி வெளியானது. இதனை கண்டித்தும், அந்த பத்திரிகை மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், திருவெறும்பூர் அருகே உள்ள துப்பாக்கி தொழிற்சாலை ஊழியர்கள், பாதுகாப்பு துறை செயலாளருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஏ.ஐ.டி.எப்., பி.எம்.எஸ்., ஐ.என்.டி.யு.சி., தொ.மு.ச., அம்பேத்கர் யூனியன் உள்ளிட்ட தொழிற்சங்கங்களை சேர்ந்த அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
துப்பாக்கி தொழிற்சாலையில் ஒப்பந்த அடிப்படையில், 2 தனியார் ஒப்பந்த நிர்வாகங்களின் கீழ் சுமார் 60 பேர் வேலை பார்த்து வருகின்றனர். அவ்வாறு வேலை பார்க்கும் தொழிலாளர்களில் அனைவருக்கும் நாள்தோறும் வேலை வழங்க முடியாது என்றும், சுழற்சி அடிப்படையில் தினமும் பாதிப்பேருக்கு மட்டும் வேலை வழங்கப்படும் என்றும் ஒப்பந்த நிர்வாகம் கூறியுள்ளது.
அதற்கு ஒப்பந்த தொழிலாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு, அனைவருக்கும் தினமும் பணி வழங்க வேண்டும் என்று கூறி கடந்த 30-ந் தேதி ஒரு தனியார் ஒப்பந்த நிறுவன நிர்வாகத்தின் கீழ் வேலை பார்க்கும் 30 தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று ஒரு தனியார் நிறுவன நிர்வாகத்தின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் உத்திராபதி தலைமையிலும், மற்றொரு ஒப்பந்த நிறுவன நிர்வாகத்தின் கீழ் வேலை பார்க்கும் தொழிலாளர்கள் பெரியசாமி தலைமையிலும் வேலையை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.